ETV Bharat / state

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம்!

author img

By

Published : Jan 15, 2021, 5:47 PM IST

Updated : Jan 15, 2021, 8:56 PM IST

டார்ச் சின்னம்
டார்ச் சின்னம்

17:44 January 15

மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதுச்சேரியில் டார்ச் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. ஆனால் தமிழ்நாட்டில் ஒதுக்கவில்லை. அதேசமயம் டார்ச் சின்னத்தை எம்ஜிஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கியது. இதனால், தமிழ்நாட்டிலும் டார்ச் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது. முதலில் கமல்ஹாசன் நேரில் வந்து கேட்டாலும் சின்னத்தை விட்டு தரமாட்டேன் என எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் விஸ்வநாத் தெரிவித்தார். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  

இந்த நிலையில் எம்ஜிஆர் மக்கள் கட்சி தலைவர் டார்ச் சின்னம் வேண்டாம், எம்ஜிஆர் பயன்படுத்திய தொப்பி, ரிக்‌ஷா போன்ற வேறு சின்னம் தந்தால் ஏற்றுக்கொள்வேன் எனத் தெரிவித்தார். இதனால் உயர் நீதிமன்றத்தில் மனு திரும்பப் பெறப்பட்டது. மீண்டும் கமல்ஹாசனுக்கு டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இது குறித்து ட்வீட் செய்துள்ள கமல்ஹாசன், "மக்கள் நீதி மய்யத்திற்கு மீண்டும் டார்ச்  சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளிபாய்ச்ச போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளில் நிகழ்ந்திருப்பது மகிழ்ச்சி. இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், துணை நின்றவர்களுக்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் படிங்க: 'சாதி, மதம் பார்க்காமல் சாதனையாளர்களுக்கு வாக்களியுங்கள்' - கமல்ஹாசன்

Last Updated : Jan 15, 2021, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.