ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள் Top 10 news @ 3 pm - chennai district news

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திகள்
author img

By

Published : Jan 15, 2021, 3:24 PM IST

1 த.மா.கா கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் காலமானார்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஞானதேசிகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்.

2 கந்துவட்டி செயலி விவகாரம்: தப்பியவரைப் பிடிக்க விமான நிலையங்களில் லுக் அவுட் நோட்டீஸ்

ஆன்லைன் கந்துவட்டி செயலி விவகாரத்தில், சீனா தப்பிச்சென்ற 'ஹாங்க்' என்ற சீன நாட்டவரைப் பிடிக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

3 அயோத்தி ராமர் கோயிலுக்கு ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நிதி!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ரூ.5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார்.

4 வடகிழக்கு பருவமழை ஜனவரி 19இல் நிறைவு பெறும் - வானிலை ஆய்வு மையம்

சென்னை: ஜனவரி 19ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

5 தாகம் தீர்த்த தந்தை பென்னிகுயிக்கிற்கு 180ஆவது பிறந்தநாள் - மரியாதை செலுத்திய ஓபிஎஸ்

தேனி: முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் உடைய 180ஆவது பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கும் திருவுருவச் சிலைக்கும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

6 கபா டெஸ்ட்: லபுசாக்னே சதத்தால் வலிமையான நிலையில் ஆஸி.

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 274 ரன்களை குவித்துள்ளது.

7 மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை!

மதுரை: ஜல்லிக்கட்டுப் போட்டியில் கலந்துகொண்ட சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை வழங்க பரிசீலனை செய்யப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

8 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வீதி உலா

திருச்சி: நீண்ட இடைவேளைக்கு பிறகு ஸ்ரீரங்கம் உற்சவர் நம்பெருமாள் இன்று (ஜன 15) வெளிப்புற உற்சவம் நடைபெற்றது.

9 மனதில் சாணக்கியன் என நினைத்து செயல்படுபவர் குருமூர்த்தி- ஜெயக்குமார்

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது மனதில் சாணக்கியன், கிங் மேக்கர் என்று நினைத்து கொண்டிருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

10 திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க இதுவே தருணம் - வைரமுத்து!

சென்னை: தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க இதுவே தக்க தருணம் என்று பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.