ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at three pm  top ten news  top ten  top news  latest news  news update  tamil nadu news  tamil nadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச்சுருக்கம்  இன்றைய முக்கிய செய்திகள்  பிற்பகல் செய்திகள்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Nov 26, 2021, 3:16 PM IST

1. இன்று 9 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று ஒன்பது மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சி வகுப்பு

சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்குவதற்காக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைணவ சான்றிதழ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்துள்ளது.

3. ஆதரவற்றப் பெண்களுக்கு 5 விலையில்லா ஆடுகள் வழங்கப்படும் - தமிழ்நாடு அரசு

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க உத்தரவிட்டு தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

4. அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக சும்மா இருக்காது - ஜெயக்குமார்

கலைஞர் உணவகங்களைக் கொண்டுவந்து, அம்மா உணவகங்களை மூடினால் அதிமுக சும்மா இருக்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

5. சத்தியமங்கலத்தில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரம்

சத்தியமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்புப் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

6. சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம்

சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகர ஆணையர் தெரிவித்துள்ளார்.

7. Covid 19 new variant: உலக நாடுகளை மிரட்டும் புதுவகை கரோனா; இந்தியாவிலும் உஷார்நிலை

ஆப்ரிக்க நாடுகளை மையமாகக் கொண்டு பரவும் COVID-19 variant- B.1.1.529 என்ற புதிய வகை கரோனா அதீத தீவிரத்தன்மையை கொண்டுள்ளது.

8. அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது - மோடி

அரசியலமைப்பு நாளான இன்று (நவம்பர் 26) நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்துகையில், அரசியலமைப்பு மீதான தாக்குதலைச் சகித்துக்கொள்ள முடியாது என எச்சரிக்கைவிடுத்தார்.

9. 'ஜெய் பீம்' படம் பார்த்து சூர்யாவை வாழ்த்திய நல்லகண்ணு!

'ஜெய் பீம்' படம் பார்த்து நடிகர் சூர்யாவையும் இயக்குநர் ஞானவேலையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மனதாரப் பாராட்டினார்.

10. ஷூட்டிங்கில் கயல் சீரியல் நாயகிக்கு காயம்.... கவலையில் ரசிகர்கள்

கயல் சிரீயல் நாயகி சைத்ரா ரெட்டிக்கு விபத்து நடந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.