ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

top ten news at 9 pm  top ten  top news  top ten news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  9 மணி செய்திச் சுருக்கம்  இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 14, 2021, 9:05 PM IST

1. 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: இறுதி முடிவு

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்த இறுதி முடிவு இன்று எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

2. சுழற்சி முறையில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம்

ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை சுழற்சி முறையில் எப்போது தொடங்கலாம் என்பது குறித்த அறிக்கை முதலமைச்சரிடம் நாளை (செப். 15) வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

3. நீட் தேர்வு மரணங்களுக்கு திமுகவே காரணம் - அண்ணாமலை

நீட் தேர்வுக்கு உரிய பயிற்சி அளிக்காத திமுக தான் இரண்டு மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

4. 'தமிழின் தொன்மையை கோயில்களில் தேட அரிய வாய்ப்பு' - அமர்நாத் ராமகிருஷ்ணன் பெருமிதம்

தமிழ் மற்றும் தமிழர்களின் தொன்மையை கோயில்களில் தேடுவதற்கான அரிய வாய்ப்பாக இந்தப் பணியிட மாற்றத்தைக் கருதுகிறேன். இந்தத் துறையில் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேகமாக தெரிவித்துள்ளார்.

5. திருச்சியில் கிராமசபை மீட்புப் பயணம்!

திருச்சி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம சபை மீட்புப் பயணம் நடைபெற்றது.

6. இது ஒரு நாடு, இது ஒரு தேர்வு - கொதிக்கும் கமல்

ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நீட் தேர்வு நடைமுறையில் பெரும் முறைகேடுகள் நடந்துகொண்டிருக்க, தமிழ்நாட்டில் நீட் தேர்விற்கு பயந்து அப்பாவி மாணவர்கள் உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

7. சண்டிகர் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை சென்னை விமான நிலையத்திலிருந்து அமைச்சர்கள் சண்டிகருக்கு அனுப்பிவைத்தனர்.

8. வாட்ஸ்-அப் பயன்படுத்த இனி இன்டர்நெட்டே வேண்டாம்

வாட்ஸ்-அப் செயலியை மடிக்கணினி, கணினி போன்ற பிற சாதனங்களில் இணைத்து இணைய வசதி இல்லாமல் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ்-அப் மல்டி-டிவைஸ் பீட்டா வகையை வாட்ஸ்-அப் சமீபத்தில் தொடங்கியுள்ளது.

9. வெள்ளை முடியை மறைக்காதது ஏன்? - தந்தைக்கு சமீரா தந்த பதில்

சமீரா ரெட்டி தனது வெள்ளை முடியை மறைக்காததற்கான காரணம் குறித்து அவரது தந்தையுடன் உரையாடியுள்ளார்.

10. சி.வி. குமாருக்கு பரிசளித்த ஞானவேல்ராஜா!

தயாரிப்பாளர் சிவி.குமாருக்கு ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா காரை பரிசளித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.