1. புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்தப்போவதில்லை என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமன் நியமனம்!
தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் தலைவராக ந.கௌதமனை நியமனம் செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3. தமிழ்நாட்டில் 9,100 பேர் எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு
கிருஷ்ணகிரி, அரியலூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 வீதம் 600 மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும், இதன் மூலம் தமிழ்நாட்டில் 9,100 பேர் எம்பிபிஎஸ் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புள்ளாதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
4. தூத்துக்குடி ரவுடி என்கவுண்டர் - துப்பாக்கி குண்டுகளை தேடும் காவல் துறை
தூத்துக்குடியில் ரவுடி துரைமுருகன் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் நான்கு துப்பாக்கி குண்டுகளை தேடி வருகின்றனர்.
5. குயின்ஸ் லேண்ட் நிலம் ஆக்கிரமிப்பு வழக்கு - மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு
குயின்ஸ் லேண்ட் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மறுத்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
6. ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பல் கைது - ரூ.20 லட்சம் பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் சட்டவிரோதமாக இணையதளம் மூலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த கும்பலை கைது செய்த காவல் துறையினர், அவர்களிடம் இருந்த 20 லட்சம் ரூபாய் பணம், சிம்கார்டுகள், செல்ஃபோன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
7. பாலியல் தொல்லை வழக்கு: எதிர் தரப்புக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட பெண் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
மதுரை மாநகராட்சி பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டில் வழக்கில் சிக்கிய ஆசிரியருக்கு ஆதரவாக பாதிக்கபட்ட மாணவி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
8. 2ஜி விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட முன்னாள் சிஏஜி வினோத் ராய்!
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்தை தெரிவித்ததற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமிடம், முன்னாள் சிஏஜி வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.
9. நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் ரஜினிகாந்த் முழு உடல் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10. ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? - உண்மையை உடைத்த சூர்யா
நடிகர் சூர்யா, ’ஜெய் பீம்’ திரைப்படத்தில் தான் ஏன் வழக்கறிஞராக நடித்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.