1. ஆயுத பூஜை: பூ வரத்து அதிகம்!
கரோனா எதிரொலியாக ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாள்களில் கோயம்பேடு மலர்ச் சந்தையில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
2. ஆயுத பூஜை: பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு
அண்மைக்காலமாகப் பெய்துவரும் பருவ மழையால் தருமபுரி மலர்ச்சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்துள்ளது. ஆயுத பூஜை என்பதால் பூ உழவரும், வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
3. 3 நாள்கள் தொடர் விடுமுறை... உற்சாகத்தில் அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள்
தமிழ்நாட்டில் பள்ளிகளைத் தொடர்ந்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் அக்டோபர் 16ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
4. பூரண குணமடைந்த புலி!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு பூரண குணமடைந்த புலி, தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின்படி பாதுகாப்பாக தனிமைப்படுத்தப்பட்டது.
5. ராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி அனுமதி சீட்டுக்கு 'நோ'!
ராமேஸ்வரம் தென் கடல் பகுதியில் நாளை பலத்த காற்று வீசக் கூடும் என்பதால், மீனவர்களுக்கு மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது என மீன்வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. கவுன்சிலிங் வெறும் கண்துடைப்பா? - முறைகேடு நடைபெறுவதாக காணொலி வெளியிட்ட மாணவர்கள்
தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு கலந்தாய்வில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படாமல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, முறைகேடு நடைபெறுவதாகக் கூறி காணொலி ஆதாரம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
7. தொழிலாளர் கொலை வழக்கு: திமுக எம்பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷிடம் விசாரணை நிறைவுற்றதையடுத்து, அவரை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
8. காந்தியை தேசத் தந்தையாக கருதவில்லை - சொல்கிறார் சாவர்கர் பேரன்
காந்தியை தான் தேசச் தந்தையாகக் கருதவில்லை என சாவர்கரின் பேரனான ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார்.
9. முடிவுக்கு வரும் மணி ஹெய்ஸ்ட்: வெளியான 'பார்ட் 2' டீசர்!
பிரபல இணையத்தொடரான மணி ஹெஸ்ட் தொடரின் பார்ட் 5வின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது. இதனுடன் இந்த தொடர் முடிவடைவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
10. சிவகார்த்திகேயன் படத்தால் நகர்ந்துபோன சசிகுமார், அதர்வா திரைப்படங்கள்
டாக்டர் திரைப்படத்தால் ஆயுதபூஜைக்கு வெளியாகவிருந்த சசிகுமார், அதர்வா படங்கள் தள்ளிப்போனது.