ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 7 am  top ten  top news  top ten news  latest news  tamilnadu latest news  tamilnadu news  news update  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  அண்மை செய்திகள்  செய்திச் சுருக்கம்  7 மணி செய்திச் சுருக்கம்  காலை 7 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 7, 2021, 7:21 AM IST

1. அஞ்சலகப் படிவங்களில் மீண்டும் தமிழ் - அன்னைத் தமிழுக்கு கிடைத்த வெற்றி

அஞ்சலகங்களிலும் அடுத்த இரு வாரங்களுக்குள் பணவிடை, சேமிப்புக் கணக்கு சார்ந்த படிவங்களில் தமிழ் எழுத்துகள் இருக்கும் என அஞ்சல் துறை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இது அன்னைத் தமிழுக்கு கிடைத்த வெற்றி என சு. வெங்கடேசன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

2. உள்ளாட்சித் தேர்தல்: முதல்கட்டத்தில் 74 விழுக்காடு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவில் 74 விழுக்காட்டினர் தங்களின் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர்.

3. பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோயிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

4. ஒகேனக்கல்லில் மகாளய அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்!

தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து தர்ப்பணம் செய்தனர்.

5. திருவள்ளூரில் தொடர் மழை - வீடுகளுக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி

திருவள்ளூரில் தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

6. பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் பெரியசாமி மலையில் சாமி சிலைகள் உடைப்பு

பிரசித்திப்பெற்ற சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான பெரியசாமி மலையில், சாமி சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7. உதவி ஆய்வாளருக்கு அரிவாள் வெட்டு - விசாரணைக்கு சென்ற இடத்தில் நடந்த விபரீதம்

ராமநாதபுரத்தில் விசாரணைக்கு சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. லக்கிம்பூர் வன்முறை: கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்த ராகுல், பிரியங்கா

உத்தரப் பிரதேச லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்ட எட்டு உழவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆறுதல் தெரிவித்தனர்.

9. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் வீரமே வாகை சூடும்!

வீரமே வாகை சூடும் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

10. IPL 2021: ஆர்சிபியை அடக்கி ஆறுதல் வெற்றிபெற்ற ஹைதராபாத்

ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 ரன்களில் வீழ்த்தி ஹைதராபாத் வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.