ETV Bharat / state

நண்பகல் 3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 3 PM - செய்திச்சுருக்கம்

ஈடிவி பாரத்தின் பிற்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்...

top ten news  top ten  top news  latest news  tamilnadu latest news  news  news updates  tamilnadu news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  3 மணி செய்திச்சுருக்கம்  செய்திச்சுருக்கம்  நண்பகல் 3 மணி செய்திச்சுருக்கம்
செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 18, 2021, 3:33 PM IST

1. நடப்புக் கூட்டத் தொடரிலேயே 'நீட்'டுக்கு எதிரான சட்ட முன்வடிவு - ஸ்டாலின்

நடப்புக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான சட்ட முன்வடிவு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரவையில் இன்று அறிவித்துள்ளார்.

2. எங்கப்பன் குதிருக்குள் இல்லை - கொடநாடு விவகாரம் குறித்து ஸ்டாலின் விளக்கம்

எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதை நிரூபித்துவிட்டு, இங்கேயிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள் (அதிமுகவினர்). கொடநாடு கொலை, கொள்ளை விசாரணையைப் பொறுத்தமட்டிலே, தேர்தல் காலத்திலே கொடுத்திருந்த வாக்குறுதியைத்தான் இப்போது இந்த அரசு நிறைவேற்றிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறல்ல என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

3. கோவையில் கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த கட்டடங்கள் இடிப்பு

கோவையில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

4. முக்கிய வழக்குகளை தமிழ்நாட்டுக்கு வெளியே மாற்ற அடுத்தடுத்த கோரிக்கைகள்... காரணம் என்ன?

தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மிகுந்த கவனத்தைப் பெற்ற வழக்குகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றக் கோரி அடுத்தடுத்து இதேபோல் கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இதன் பின்னணி குறித்து காணலாம்.

5. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

6. 'கொலிஜியம்' பரிந்துரையில் மூன்று பெண் நீதிபதிகள்?

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு மூன்று பெண் நீதிபதிகளை உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

7. சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் சசி தரூர் விடுவிப்பு

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கிலிருந்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது.

8. நாயகியான பிரபல தொலைக்காட்சி தொடர் வில்லி

தொலைக்காட்சி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துவந்த சைத்ரா ரெட்டி, 'கயல்' தொடர் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார்.

9. ரெஜினாவின் 'சூர்ப்பனகை' படப்பிடிப்பு நிறைவு!

நடிகை ரெஜினா கசாண்ட்ரா நடிப்பில் உருவாகியுள்ள, ’சூர்ப்பனகை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

10. தீபாவளியன்று விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

நடிகர் விஜய் நடித்துவரும் 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் தீபாவளியன்று வெளியிட படக்குழு முடிவுசெய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.