ETV Bharat / state

3 மணிச் செய்தி சுருக்கம் Top ten news @ 3 pm - ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணிச் செய்தி சுருக்கம்

top-ten-news-at-3-pm
top-ten-news-at-3-pm
author img

By

Published : Jul 13, 2021, 3:12 PM IST

1.வருகிற 16ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

வருகிற 16ஆம் தேதி முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்துகிறார்.

2.நீட் பாதிப்பு ஆய்வுக் குழு செல்லும் - சென்னை உயர் நீதிமன்றம்

நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவே அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை அமைத்துள்ளது.

3.தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி- ரகுபதி

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளிலும் தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன, தமிழ்நாடு அரசு அதைத் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு ஒரு சட்டக் கல்லூரி அமைப்பதே அரசின் கொள்கை என்றும் கூறினார்.

4.நீட் தேர்வு தேவையில்லை -பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை நீட் தேர்வு தேவையில்லை என மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

5.மருந்துகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

6.தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மேற்கு மாவட்டங்களில் மழை!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும், நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

7.இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு - இறப்பு எண்ணிக்கை நிலவரம்

ஹைதராபாத்: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31 ஆயிரத்து 443 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 20 இறப்புகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

8.போக்சோவில் கைதான ஆசிரியர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை!

முதுகுளத்தூர் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

9.முதல் உலக கோப்பை நாயகன் யாஷ்பால் சர்மா காலமானார்!

1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் அறிமுகமானவர் யாஷ்பால் சர்மா. அந்தப் போட்டியில் 26 பந்துகளில் 11 ரன்கள் விளாசிய யாஷ்பால் சர்மா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடிக்க காரணமாக இருந்தார்.

10.அதர்வாவின் 'அட்ரஸ்' பட டீசர்: சூப்பர் ஸ்டார் பாராட்டு

நடிகர் அதர்வா முரளி நடிப்பில் உருவாகியுள்ள 'அட்ரஸ்' படத்தின் டீசரை பார்த்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் வெகுவாக பாராட்டியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.