ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 11 am  top ten  top ten news  top news  tamilnadu news  tamilnadu latest news  news update  தமிழ்நாடு செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 12, 2021, 11:05 AM IST

1. மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு: கோவையில் என்ஐஏ அதிரடி சோதனை

கோவையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகக் கைதுசெய்யப்பட்ட மூவரின் இல்லங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டுவருகிறது.

2. நெல்லை களம்: மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்... முடிவு தாமதமாகுமாம்!

திருநெல்வேலியில் இரண்டாயிரத்து 69 பதவிகளுக்கு, இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

3. தாமதமான வாக்கு எண்ணிக்கை: தாம்பரத்தில் பரபரப்பு

தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கும், 28 மாவட்டங்களில் விடுபட்ட பகுதிகளுக்கும் சேர்த்து ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதலே மும்முரமாக எண்ணப்பட்டுவருகின்றன. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

4. துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா? - வைகோ விளக்கம்

தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என்று தனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

5. 'வருமுன் காப்போம்' திட்டம்: இன்று 1,250 மருத்துவ முகாம்கள்

தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் ஆயிரத்து 250 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

6. மெரினாவில் தொடரும் சோகம்: இறப்பைத் தடுப்பதற்குப் புதிய அவசர உதவி மையம்!

மெரினா கடற்கரையில் குளிக்க வருபவர்கள் அலையில் சிக்கி மரணம் அடைவதைத் தடுக்கும் வகையில் புதிய அவசர உதவி மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

7. ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்

ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் பயங்கரவாத குழுவினருக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

8. நீ என் செல்லம் - அக்ஷராவுக்கு வாழ்த்துத் தெரிவித்த சுருதி

அக்ஷரா ஹாசன் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் அவரது சகோதரி சுருதி ஹாசன் சமூக வலைதளத்தில் வாழ்த்துத் தெரிவித்து இருவரும் இருக்கும் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார்.

9. HBD சினேகா - புன்னகை அரசிக்குப் பிறந்தநாள்

புன்னகை அரசி சினேகா இன்று தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவரும் நிலையில் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துவருகின்றனர்.

10. கடைசிவரை ஆர்சிபியில்தான் வேட்டையும் வாழ்க்கையும் - கோலி

ஐபிஎல் தொடரில் விளையாடும் கடைசிப்போட்டி வரை பெங்களூரு அணிக்காக மட்டும்தான் விளையாடுவேன் என்று அந்த அணி கேப்டன் கோலி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.