ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 11 am  top ten  top news  top ten news  latest news  tamilnadu latest news  tamil nadu news  news update  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  இன்றைய செய்திகள்  செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Oct 7, 2021, 11:44 AM IST

1. ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.13.35 கோடி போனஸ்

மதுரை கோட்டத்தில் பணியாற்றும் ரயில்வே ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு அறிவித்துள்ள 78 நாள்களுக்கான ஊக்கத் தொகை ரூ.13.35 கோடி வழங்கப்படவுள்ளதாக மதுரை கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு அறிவித்துள்ளார்.

2. ஆன் டைம்மில் ரயில்கள் - தென்னக ரயில்வே

தென்னக ரயில்வே ரயில்கள் உரிய நேரத்திற்கு ரயில் நிலையங்களிலிருந்து புறப்பட்டுச் செல்லும் இடத்திற்கு உரிய நேரத்தில் செல்வது அதிகரித்துள்ளதாக தென்னக ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தெரிவித்துள்ளார்.

3. லூப் சாலையில் மீன் அங்காடி கட்ட ரூ.10 கோடி ஒதுக்க ஒப்புதல்

சென்னை மெரினா கடற்கரையில், லூப் சாலையில் மீன் அங்காடி கட்டுமான பணிக்காக ஒன்பது கோடியே 97 லட்சம் ரூபாய் ஒதுக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

4. ஆன்லைனில் நேரடி நெல் கொள்முதல்: உழவர் எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதலில் ஆன்லைன் விற்பனை முறைக்கு திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

5. செய்தியாளர் மீது திமுக பிரமுகர் உள்ளிட்டோர் தாக்குதல்: ஒருவர் கைது

வேலூரில் செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், ஒளிப்பதிவாளர் மீது சுயேச்சை வேட்பாளரின் மகனும், திமுகவைச் சேர்ந்த ஒருவரும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

6. போலீஸ் ரோந்து வாகனம் உடைப்பு: முக்கிய குற்றவாளி கைது

அம்பத்தூர் ஐ.சி.எஃப். காலனியில் காவல் ரோந்து வாகனம் உள்ளிட்ட ஐந்து வாகனங்களை அடித்து நொறுக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை ஐந்து மாதங்களுக்குப் பின் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

7. குடிபோதையில் ரகளை: தட்டிக்கேட்ட காவலருக்கு கத்திகுத்து

சீர்காழி அருகே சாலையோரம் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டவர்களைத் தட்டிக்கேட்ட காவலரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

8. வாக்குப்பெட்டியை எடுக்கவிடாமல் தகராறு!

ஆலங்குளம் அருகே வாக்குச்சாவடியில் உள்ள வாக்குப் பெட்டியை எடுக்கவிடாமல் இருதரப்பினர் தகராறில் ஈடுபட்டதால் அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

9. தின்னர் தொழிற்சாலையில் தீ விபத்து

தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் தின்னர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

10. டெலிகிராமிற்கு அடித்த ஜாக்பாட்

வாட்ஸ்அப் செயலியின் முடக்கத்தால் 70 மில்லியன் (7 கோடி) பயனாளர்கள் டெலிகிராம் செயலிக்கு மாறியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.