ETV Bharat / state

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @11AM

author img

By

Published : Oct 4, 2021, 11:15 AM IST

ஈடிவி பாரத்தின் நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

நண்பகல் 11 மணி செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  செய்திச் சுருக்கம்  அண்மைச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  முன்னியச் செய்திகள்  தமிழ்நாடு செய்திகள்  news update  latest news  tamilnadu latest news  tamilnadu news  top ten news  top news  top ten news at 11 am  top ten
செய்திச் சுருக்கம்

1. பத்திரப்பதிவில் போலி ஆவணத்தை ரத்துசெய்ய பதிவாளருக்கு அதிகாரம்!

போலியாகப் பதிவுசெய்யப்பட்ட பத்திரப் பதிவுகளைப் பதிவாளர்களே ரத்துசெய்யும் சட்டத்திருத்தம் குறித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

2. “சில கொள்கை முடிவுகளால்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தோம்” - ஓபிஎஸ்

அதிமுக தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சி அமைக்கும் சூழல் இருந்தது. ஆனால், சில கொள்கை முடிவு எடுத்த காரணத்தால் சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்தோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

3. குட்டியுடன் அலையும் பெண் யானை: வாகன ஓட்டிகள் அவதி

பெண் யானை ஒன்று குட்டியுடன் சாலையில் அலைவதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

4. LKG சீட் வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி - மதுவந்தி மீது புகார்!

சென்னை கேகே நகர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் எல்கேஜி சீட் வாங்கித் தருவதாக கூறி ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி 5 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.

5. ஆந்திராவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

வெளிநாட்டில் மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி, துபாயிலிருந்து வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

6. போதையில் திமுக தொண்டர் நாம் தமிழர் கொடியைக் கிழித்து ரகளை!

திருப்பத்தூரில் உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாகப் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுப்பட்ட இளைஞர்களை, கோடாரியால் தாக்க முயன்று, கட்சியின் கொடியைக் கிழித்த திமுக பிரமுகரைக் கைது செய்யக்கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

7. பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: ஒருவர் கைது

பேருந்துக்காக நின்றுகொண்டிருந்த பெண்ணின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டதில் பெண் உயிரிழந்தார். இதுத் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

8. காதல் விவகாரம்: தங்கையைக் கொன்ற அண்ணன்

காதல் விவகாரத்தில் செல்போனில் பேசிய தங்கையை அண்ணனே கொலைசெய்த சம்பவம் பழனி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

9. Pandora Papers: இந்திய பிரபலங்களின் முகத்திரையைக் கிழித்த பண்டோரா ஆவணங்கள்

சட்டத்துக்கு விரோதமாக வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பினாமி சொத்துகள் வாங்கிக் குவித்த பிரபலங்களின் பெயர்களை பண்டோரா ஆவணங்கள் வெளியிட்டுள்ளது. இதில் 380 இந்தியர்களின் பெயர்கள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

10. உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் உழவர்கள் போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் எட்டு பேர் இறந்ததை அடுத்து பாஜகவுக்கு இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், இதனை காட்டுமிராண்டித்தனம் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.