ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM - 11 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

top ten news at 11 am  top ten news  top ten  top news  latest news  tamilnadu news  tamilnadu latest news  தமிழ்நாடு செய்திகள்  முக்கியச் செய்திகள்  இன்றைய முக்கியச் செய்திகள்  செய்திச் சுருக்கம்  11 மணி செய்திச் சுருக்கம்  காலை 11 மணி செய்திச் சுருக்கம்
செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 2, 2021, 11:32 AM IST

1. 50 டன் திறன் கொண்ட மறுசுழற்சி ஆலை - சோதனை ஓட்டம்

சென்னை கொடுங்கையூர் குப்பை கொட்டும் வளாகத்தில், 50 டன் திறன் கொண்ட மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட்டு தற்போது சோதனை அடிப்படையில் செயல்படுகிறது.

2. ஓபிஎஸ் மனைவி மறைவு - டிடிவி தினகரன் நேரில் அஞ்சலி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

3. விக்கிப்பீடியா மீது பிரபல இயக்குநர் புகார்

பட்டியலின சமூகத்தினர் குறித்து ஆக்ஸ்போர்டு அகராதியிலும், விக்கிப்பீடியாவிலும் இடம்பெற்றிருக்கும் தவறான பொருளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

4. 'மோடி சமஸ்கிருதத்திற்கு மட்டும் முக்கியத்துவம் காட்டுவது ஏன்?'

மனத்தின் குரல் நிகழ்ச்சியிலும், பொதுக் கூட்டங்களிலும் திருவள்ளுவர், பாரதியார், ஒளவையார் ஆகியோரை மேற்கோள்காட்டி பேசுகிற பிரதமர் மோடி, சமஸ்கிருதத்திற்கு மட்டும் அதிக முக்கியத்துவம் காட்டுவது ஏன் எனத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

5. வரதட்சணை கொடுமை- கேரளாவில் இளம்பெண் தற்கொலை

வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

6. காஷ்மீர் உரிமைக்கு போராடிய சையத் அலி ஷா கிலானி உயிரிழப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஹூரியத் மாநாட்டுக் கட்சி தலைவர் சையத் அலி ஷா கிலானி உயிரிழந்தார். அவருக்கு வயது 92.

7. தினசரி சந்தைக்கு சீல் - மனித நேய மக்கள் கட்சி போராட்டம்

உதகை தினசரி சந்தையில் சீல் வைக்கபட்டுள்ள கடைகளை திறக்க கோரியும், குழு அமைத்து வாடகை பாக்கி பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தியும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய மக்கள் கட்சியினர், வியாபாரிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

8. ஜி.பி. முத்து மீது புகார் - ஆபாச பேச்சால் சர்ச்சை

சமூக வலைதளங்களில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிடும் ஜி.பி. முத்து, சூர்யா தேவி உள்ளிட்டோர்களை கைது செய்யக் கோரி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

9. Video: போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் காட்சி

திருமங்கலத்தில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

10. பிக்பாஸ் மகத்துக்கு வில்லனாகும் புதுமுகம்!

'கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா' படத்தில் வில்லனாக நடிக்க புதுமுக நடிகர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.