ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM - 9 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

top-10-news-at-9pm
top-10-news-at-9pm
author img

By

Published : Sep 26, 2021, 9:03 PM IST

1. பிரதமர் மோடி கொண்டு வந்த 157 பொக்கிஷங்கள்

அமெரிக்க அரசு ஒப்படைத்த இந்தியாவுக்குச் சொந்தமான 157 கலைப்பொருட்களுடன் பிரதமர் மோடி இன்று (செப். 26) இந்தியா திரும்பியுள்ளார்.

2. புதிதாக 1,694 பேருக்கு கரோனா உறுதி!

தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 1,694 நபர்களுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

3. Storming Operation - தமிழ்நாட்டில் இதுவரை 3,325 பேர் அதிரடி கைது

தமிழ்நாட்டில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு முதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முற்றுகைச் செயல்பாடு (Storming Operation) மூலம் இதுவரை 3,325 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4. புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சிக்கென தனித்துறை வேண்டும் - பாரதிதாசனின் பேரன் வலியுறுத்தல்

புதுச்சேரியில் தமிழ்வளர்ச்சிக்கென தனித்துறை உருவாக்க வேண்டும் என்று பாரதிதாசனின் மூத்தபேரன் கவிஞர் கோ. செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

5. ஹைதராபாத் கனமழை - கழிவுநீர் கால்வாயில் கால் வைத்தவர் மாயம்!

ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே சாலையில் நடந்து சென்ற நபர், கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்படும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

6. நகைக்கடன் முறைகேடுகளை தடுக்க குழு அமைத்தது அரசு

கூட்டுறவு வங்கிகளில் நகை முறைகேடு மட்டுமின்றி, பொதுக்கடன் முறைகேடுகளை ஆய்வு செய்யவும் குழு அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

7. தொழிலாளியை தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் பணி தீவிரம்!

தேவர்சோலை பகுதியில் தோட்ட தொழிலாளியை தாக்கிய புலியை கூண்டு வைத்துப் பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

8.உலக சுற்றுலா தினம் - கீழடியை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடி பகுதியில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகள், அங்கு எடுக்கப்பட்ட பொருட்களை பார்வையிட இன்று ஒருநாள் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
9. IPL 2021: பெங்களூரு பேட்டிங்; மும்பையில் ஹர்திக்

பெங்களூரு - மும்பை அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

10. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த விஜய் - வெளியானது 66ஆவது பட அப்டேட்

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து, தனது 66ஆவது படமாக வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார் என அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.