1. 'தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும்' - கனிமொழி
தூத்துக்குடியில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்கள் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அத்தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடியில் டைடல் பார்க் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
2. தனியார் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய நபரை தாக்கிய காவலர்கள் - ரூ.3 லட்சம் அபராதம்
தனியார் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடியவரை தாக்கி, சாதி பெயரை சொல்லி சித்ரவதை செய்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல் துறையினருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
3. வேட்புமனு நிராகரிப்பு - சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது!
தியாகதுருகம் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் 50-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
4. துணை குடியரசுத் தலைவருடன் தமிழ்நாடு ஆளுநர் சந்திப்பு
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை தொடர்ந்து துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
5. அரசு மீது பொய் கருத்துகளை பரப்பும் எடப்பாடி - தங்கம் தென்னரசு
திமுக ஆட்சியின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
6. எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பாஜகவோடு கூட்டணி வைக்கக் கூடாது - திருமாவளவன்
திரிபுராவில் இடதுசாரிகள் மீது நடத்தப்பட்ட கலவரம் காரணமாக பாஜகவை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (செப்.24) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
7. இலவச வேட்டி, சேலை வழங்கலில் சிக்கல்?
தமிழ்நாடு அரசு இலவச வேட்டி, சேலை தயாரிப்பதற்காக ரூ.499 கோடி நிதி ஒதுக்கிய நிலையில், நூல்களை கொள்முதல் செய்ய டெண்டர் கோராததால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை கிடைப்பதில் சிக்கல் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
8.ஆமை காட்டெருமை ஆன கதை - புதிய உச்சம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி
இந்திய பங்குசந்தை இன்றைய வர்த்தக தினத்தில் புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
9.IPL 2021: டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு
ஐபிஎல் 2021 தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி, பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
10.மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் - வெளியான வைரல் புகைப்படம்!
மாரிசெல்வராஜ் படத்திற்காக கபடி பயிற்சி எடுத்து வருகிறார் துருவ் விக்ரம். இதன் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.