1.மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கக் குழு அமைக்க கோரிக்கை!
புதிய முதலமைச்சராக வருபவர், மாநிலக் கல்விக் கொள்கை வகுக்கும் குழு அமைக்க முதல் கையெழுத்திட வேண்டும் எனப் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை வைத்துள்ளது.
2. அம்பேத்கருக்கு தாக்கரே மலரஞ்சலி!
நாட்டின் முதல் சட்ட அமைச்சர், சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மலரஞ்சலி செலுத்தினார்.
3. சின்னத்திரை நடிகர் திறந்துவைத்த கடைக்கு மூடுவிழா நடத்திய மாநகராட்சி!
பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் புகழ், கைப்பேசி விற்பனை கடை ஒன்றின் இணையதளத்தை தொடங்கி வைப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது கரோனா நடைமுறைகளை பின்பற்றாமல் கூட்டம் அதிகமாக சேர கடை நிர்வாகம் அனுமதித்ததால், கடையை இழுத்து மூடி மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
4. யோகி, அகிலேஷ் குணமாக பிரியங்கா வாழ்த்து!
உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கோவிட் பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5. சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து: மாணவர்களின் கருத்து!
கரூர்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்குப் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து எனவும் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்து கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
6. கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியம்
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.
7. படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் உயிரிழப்பு, மாயமான 9 மீனவர்களை தேடும் பணி மும்முரம்
ராமநாதபுரம்: கர்நாடக மாநிலம், மங்களூர் ஆழ்கடல் பகுதியில் சிங்கப்பூரைச் சார்ந்த சரக்குக் கப்பல் மோதி, படகு மூழ்கியதில் இறந்த மூன்று நபர்களின் உடல்களை மீட்டு, மாயமான ஒன்பது மீனவர்களையும் தேடும் பணியில் இந்தியக் கடலோர காவல் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
8. IPL 2021 SRH vs RCB: டாஸ் வென்ற வார்னர் முதலில் பந்துவீச முடிவு!
ஹைதராபாத் - பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் ஆறாவது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
9. 'மாஸ்டர்' தயாரிப்பாளரின் அடுத்த படம்: அறிமுகமாகும் அதர்வாவின் தம்பி!
'மாஸ்டர்' படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இரண்டாவதாகத் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
10. ’நெகட்டிவ்வாக இருப்பது நல்லது’ - கரோனாவிலிருந்து மீண்ட ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.