ETV Bharat / state

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9pm

author img

By

Published : Dec 9, 2020, 9:20 PM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்

1. ஆற்று தண்ணீரின் மாதிரிகளை ஆய்வு கூடத்திற்கு அனுப்பவேண்டும்: நீதிமன்றம் உத்தரவு

அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் 5 பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் எடுத்து சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல் செய்ய அவ்வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2. 'அலுவலர்கள் வெட்கப்படவேண்டும்' - தியாகிகள் பென்ஷன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்

சென்னை: பென்ஷனுக்கு 99 வயது முதியவரை நீதிமன்றத்திற்கு நாட செய்த குற்றத்திற்கு அலுவலர்கள் வெட்கப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

3. சினிமா டூ அரசியல்: எம்.ஜி.ஆரின் மேஜிக்கை நிகழ்த்துவாரா ரஜினிகாந்த்?

அரசியல் மற்றும் சினிமா, இவை இரண்டும் பிரிக்கமுடியாத இணைகளாக தமிழ்நாட்டில் நீண்டகாலமாகவே இருந்து வருகின்றன. தமிழ் திரை உலகம் பல அரசியல் முகங்களை தமிழ்நாட்டு மக்களுக்கு தந்திருந்தாலும், முதல்முதலாக எம்.ஜி.ஆர்தான் திரை கலைஞராக இருந்து கட்சி ஒன்றை தொடங்கி முதலமைச்சர் நாற்காலியையும் கைப்பற்றினார். தற்போது திரை உலக ஜம்பாவானான ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில், எம்.ஜி.ஆருடன் ரஜினியை ஒப்பிட்டு சில வலதுசாரி அரசியல் நோக்கர்கள் கருத்துகளை முன்வைத்துவருகின்றனர். இருவரும் திரை உலகில் நீண்ட காலம் கோலாச்சிய நிலையில், ஒருவர் அரசியலிலும் வெற்றி கண்டுள்ளார். மற்றொருவரோ தற்போதுதான் தனது பிரவேசத்தை அறிவித்துள்ளார்.

4. உள்ளாட்சித் தேர்தல் : தெலங்கானாவை தொடர்ந்து ராஜஸ்தானிலும் ஏறுமுகம் காட்டும் பாஜக!

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சியான காங்கிரஸைவிட அதிக இடங்களை பாஜக வென்றிருப்பது அரசியல் களத்தில் பேசும்பொருளாகியுள்ளது.

5. அஜய் வாண்டையார் மீது வழக்குப்பதிவு

நட்சத்திர விடுதியில் மோதிக்கொண்ட சம்பவத்தில் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில இளைஞரணி செயலாளர் அஜய் வாண்டையார் மீதும் விடுதி ஊழியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

6. 27ஆவது ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்ற முதலமைச்சர்!

நாகப்பட்டினம்: முதலமைச்சர் பழனிசாமி மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் 27ஆவது ஆதீனத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

7. போராட்டம் தீவிரப்படுத்தப்படும் - விவசாய சங்கங்கள் அறிவிப்பு

டெல்லி: அரசின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் போராட்டம் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

8. குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு!

சென்னை: தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குனர் பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

9. நிவர்புயல் பாதிப்புகள்: முதல்கட்டமாக ரூ.74 கோடி ஒதுக்கீடு

சென்னை: நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய தமிழ்நாடு அரசு முதற்கட்டமாக ரூ.74 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

10. திருப்பூரில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

திருப்பூர்: தாராபுரத்தில் உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.