ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 23, 2021, 9:30 PM IST

1. Video: பைக்கில் சாகச முயற்சி; காலை முறித்துக்கொண்ட கேரள புள்ளீங்கோ

இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சாகச முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, மற்றொரு வாகனம் மோதியதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சாகசம் செய்யும்போது எடுக்கப்பட்ட காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2. கேம் ஆரமிச்சு ரொம்ப நேரம் ஆச்சு தம்பி... வலிமை பட 'கிளிம்ப்ஸ்' ரிலீஸ்!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியாகவிருக்கும் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் (முன்னோட்ட காணொலி) இன்று மாலை வெளியாகி ரசிகர்களை குதூகலமடையச் செய்துள்ளது.

3. IPL 2021 MI vs KKR: கொல்கத்தா பந்துவீச்சு; திரும்பினார் ரோஹித்

மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மார்கன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

4. 'தர்மத்தின் தலைவன்' படபாணியில் சட்டப்பேரவையில் வேட்டி அவிழ்ந்ததுகூட தெரியாமல் பேசிய சித்தராமையா

கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தனது வேட்டி நழுவியதுகூட அறியாமல் தொடர்ந்து பேசி வந்தது, பேரவையில் கராசார விவாதத்தை எழுப்பியது.

5. 9 பேரூராட்சிகள், நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியீடு

தமிழ்நாடு அரசு, 9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகள், வரிமுறை மாற்றம், நகராட்சி ஆணையர் நியமனம் உள்ளிட்ட விதிகள் திருத்தி அமைக்கப்படவுள்ளன.

6. தமிழ்நாட்டில் புதிதாக 1,745 பேருக்குக் கரோனா

தமிழ்நாட்டில் இன்று (செப். 23) புதிதாக 1,745 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

7. வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தரவேண்டிய நிவாரணத்தை வழங்கக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8. ‘மண்ணையும் மக்களையும் காப்பதில் சளைக்காத ஆட்சி திமுக’ - ஸ்டாலின்

மண்ணையும் மக்களையும் காப்பதில் எப்போதும் யாருக்கும் சளைக்காத ஆட்சிதான் திமுக ஆட்சி, இதைவிட வேகமான ஆட்சி இந்தியாவில் இருக்க முடியாது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

9. ரோடு இருந்தா மட்டும் தான் கல்யாணம் - பெண்ணின் குரலுக்கு செவிமடுத்த அரசு

தன் குடிசைப் பகுதிக்கு சாலை அமைத்துக் கொடுத்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன் என கன்னட மொழி பேசும் பெண் ஒருவர் முதலமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஈடிவி பாரத் செய்தி வெளியிட்டது. அதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

10. காட்டில் விடப்பட்ட ரிவால்டோ - காணொலிப் பதிவுத் தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவு!

காட்டில் விடப்பட்டுள்ள ரிவால்டோ யானையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து காணொலிப் பதிவு தாக்கல் செய்ய வனத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.