ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Sep 12, 2021, 9:11 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

1. நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி

சேலத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் இறந்த மாணவர் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

2. குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு

குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் காட்லோடியா சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். முதலமைச்சராக இருந்த விஜய் ரூபானி நேற்று பதவியை ராஜினாமா செய்த நிலையில், பூபேந்திர படேல் புதிய முதலமைச்சராகத் தேர்வாகியுள்ளார்.

3. நீட் தேர்வெழுத வந்த மாணவனின் தந்தைக்கு நேர்ந்த துயரம்

ஓடும் அரசு பேருந்தின் டயர் திடீரென்று கழன்று விழுந்ததில், நீட் தேர்வு எழுத வந்த மாணவனின் தந்தைக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

4. வைரலாகும் வடிவேலுவின் பிறந்தநாள் புகைப்படம்!

நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5. திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம்!

வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவோம்; திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதான திட்டம் வரும் 17ஆம் தேதி தொடங்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

6. ஒன்றிய நிதியமைச்சர் நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு - எம்.எல்.ஏவை அனுமதிக்க மறுத்ததால் பரபரப்பு

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்ட நிகழ்வில் பாஜக கட்சியினருக்கும், வங்கி ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

7. பி.எட் பட்டப்படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்

தமிழ்நாட்டில் பி.எட் பட்டப்படிப்பில் சேர மாணவர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

8. சட்டம் ஒழுங்கில் அரசு முழு கவனம் - முத்தரசன்

சட்டம் ஒழுங்கு பராமரிப்பதில் தமிழ்நாடு அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

9. ஆப்கனை விட்டு வெளியேறிய குத்துச்சண்டை வீராங்கனை

தாலிபான் கொலை மிரட்டல் விடுத்த காரணத்தால் குத்துச்சண்டை வீராங்கனை சீமா ரேசாய் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார்.

10. மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.