1, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்
அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 22ஆம் தேதி அமெரிக்கா செல்கிறார். அங்கு பல கூட்டங்களில் பங்கேற்கும் பிரதமர், அந்நாட்டு அதிபர் பைடனை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
2, தடுப்பூசி போடவில்லை என்றால் கட்டாய விடுமுறை - அரசு ஊழியர்களுக்கு செக்
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் செப்டெம்பர் 15ஆம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கட்டாய விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
3, அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ...
‘அண்ணாத்த’ டைட்டிலுக்கு மாஸான இசையை தந்த இமான்; மோஷன் போஸ்டருக்கு பக்கா மாஸான இசையை கொடுத்திருக்கிறார். மோஷன் போஸ்டர் மிரட்டலாக இருக்கிறது.
4, மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று, வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5, தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கரோனா - சுகாதாரத் துறை செயலர் கவலை
தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று கவலை அளிப்பதாக இருப்பதாகவும், பரிசோதனைகளை அதிகரிக்கவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
6, உலகின் மிகப்பெரிய விநாயகர் சிலையை காண குவிந்த பக்தர்கள்
ஹைதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கைரட்டாபாத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற, மிகப்பெரிய விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஆளுநர், அரசியல் பிரமுகர்கள், பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
7, லயோலா கல்லூரி முன்னாள் முதல்வர் ஆன்ட்ரூஸ் பிரான்சிஸ் உயிரிழப்பு
சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆன்ட்ரூஸ் பிரான்சிஸ் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் 'நாக்' ஆய்வுக்கு சென்றபோது உயிரிழந்தார்.
8, புதிய ஆளுநர் வரம்பிற்குள் செயல்பட வேண்டும் - வைகோ
புதிய ஆளுநர் ஆர்.என். ரவி தங்கள் வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
9, தலைவி: யாருக்கும் "வலி" இல்லா ஒரு வாழ்க்கை வரலாறு
அக்காலகட்டத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை மட்டும் மேம்போக்காக தொட்டு லாவகமாக காட்சிகளை அமைத்து தப்பித்துக்கொண்டுள்ளார் விஜய். இதனால் இருதரப்பினருக்கும் பிரச்னை இல்லாமல் படத்தை எடுத்துள்ளார்.
10, நடிகர் விவேக் மரணம்: ஒன்றிய அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம்
நடிகர் விவேக் மரணம் குறித்து எட்டு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என ஒன்றிய சுகாதாரத் துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.