1, தமிழ்நாட்டில் புதிதாக 1,592 பேருக்கு கரோனா
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் ஆயிரத்து 592 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அறிவித்துள்ளது.
2, சேலம் அருகே 6 லட்சம் மதிப்பிலான பான்பராக், குட்கா பறிமுதல்: இருவர் கைது
ஓமலூர் அருகே பெங்களூருவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் செல்லப்பட்ட ஆறு லட்ச ரூபாய் மதிப்பிலான பான்பராக், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3, துணிக்கடை பூட்டை உடைத்து 3 லட்சம் மதிப்பிலான பொருள்கள் கொள்ளை!
சென்னை: கோயம்பேட்டில் உள்ள துணிக்கடை ஒன்றின் பூட்டை உடைத்து மூன்று லட்சம் மதிப்பிலான பொருள்களை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
4, மனைவி பிரிந்த விரக்தி... ஆத்திரத்தில் மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகன்!
வேடச்சந்தூர் அருகே மாமனாரை அரிவாளால் வெட்ட வந்த மருமகனையும் அவரது நண்பர்களையும் அக்கம்பக்கத்தினர் சுற்றிவளைத்துப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
5, ஒகேனக்கல் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!
தொடர்மழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து 22 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
6, 17% மேல் ஈரப்பதம் - நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி
அரசு நிர்ணயம் செய்த 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்ததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
7, கடத்தப்பட்ட சிறுமி காவலன் செயலி மூலம் 20 நிமிடங்களில் மீட்பு!
காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி, காவலன் செயலி மூலம் தகவல் கொடுத்த 20 நிமிடங்களிலே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
8, உலக ஆணழகன் போட்டியில் வெல்ல ஆசை; தமிழ்நாடு அரசிடம் உதவி கோரும் போக்குவரத்து தலைமை காவலர்
உலக ஆணழகன் போட்டியில் வென்று நாட்டிற்கு பெருமை சேர்க்க விரும்பும் தனக்கு தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு காவல் துறையும் உதவ முன்வர வேண்டுமென போக்குவரத்து தலைமைக் காவலர் புருஷோத்தமன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
9, மக்களைத் தேடி மருத்துவம்: 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்!
தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் இதுவரை மூன்று லட்சத்து 40 ஆயிரத்து 999 நபர்கள் பயனடைந்துள்ளனர்.
10, பாஜக, இந்து முன்னணி கட்சிகளைச் சேர்ந்த 7 பேர் கைது!
காஞ்சிபுரத்தில் பூஜை பொருள் விற்பனை செய்த கடையை அடித்து உடைத்த பாரதிய ஜனதா, இந்து முன்னணி கட்சிகளைச் சேர்ந்த ஏழு நபர்களை சிவகாஞ்சி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.