ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top Ten 10 @ 9 PM - சென்னை மாவட்ட செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2021, 8:56 PM IST

1. 'ராஜேந்திர பாலாஜி வருமானத்துக்கு அதிகமாக 73 விழுக்காடு அளவுக்கு சொத்துக்குவிப்பு'

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக் குவிப்பு புகாரின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையில், 73% அளவிற்கு வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2. சர்ச்சைக்குரிய கருத்துகளைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கலாம் - மத்திய அரசு தகவல்

ஆட்சேபனைக்குரிய கருத்துகள் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டால் அவற்றைச் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே நீக்கும் வகையிலும், வெளியீட்டு நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையிலும் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

3. மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வானார் எம்.எம். அப்துல்லா

திமுகவைச் சேர்ந்த எம்.எம். அப்துல்லா (46), மாநிலங்களவை உறுப்பினராக இன்று (செப். 3) போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. 'பசுமை தமிழகம் திட்டத்தை 5 ஆண்டுகளில் செயல்படுத்த திட்டம்'

பசுமை தமிழகம் என்ற திட்டத்தை முழுமையாக ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தி 33 விழுக்காடு வனப்பகுதியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

5. செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகத் தன் மீது பதியப்பட்டுள்ள மோசடி வழக்கை ரத்துசெய்ய கோரி, அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

6. 'வங்கி மேலாளர்களுக்குத் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்'

மாணவர்களுக்கான கல்விக்கடன் வழங்குவதில் தேவையான வழிகாட்டுதல் செய்யும் வங்கி மேலாளர்களுக்குத் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சருக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

7. சிவசங்கர் பாபாவின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு: பக்தர்களின் போராட்டத்தால் பரபரப்பு

15 நாள்கள் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிவசங்கர் பாபாவை விடுதலை செய்யுமாறு, அவரது பக்தர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

8. கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் மாயம்

சென்னையில் கடலில் குளிக்கச் சென்ற ஆறு பேர் தொலைந்துபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

9. ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு: செப். 17இல் முக்கிய உத்தரவு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 16 குற்றவியல் அவதூறு வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடர்பாக வரும் 17ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10. மணலில் வ.உ.சி.யின் உருவத்தை வரைந்து அசத்திய சிறுமிகள்

வ.உ.சி.யின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது உருவத்தை மணலில் இரண்டு சிறுமிகள் வரைந்து அசத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.