ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news at 9 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 6, 2021, 9:19 PM IST

1 தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

2 செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

3 ஜவுளி நிறுவனத்தில் பாய்லர் வெடித்து விபத்து - 4 பேர் காயம்

மதுரையில் இயங்கி வரும் தனியார் ஜவுளி நிறுவனத்திலுள்ள பாய்லர் வெடித்த விபத்தில் நான்கு பெண்கள் படுகாயமடைந்தனர்.

4 ஒரு கோடி பயனாளிகளுக்கு நீரிழிவு, ரத்த அழுத்த நோய் மருந்துகள் வழங்கல்!

டிசம்பர் மாத இறுதிக்குள் ஒரு கோடி பயனாளிகளை கண்டறிந்து, நீரிழிவு, ரத்த அழுத்த நோய்க்கான மருந்துகள் வழங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

5 மாணவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியர்!

ஒருவரின் உடைமைகளைப் பறிகொடுத்தாலும், சேர்த்து வைத்த செல்வம் போனாலும், அவர் கற்ற கல்வி எப்போதும் உதவும் என்பதற்கேற்ப அக்கல்வியின் சிறப்பை உணர்ந்து செயலாற்றி வருகிறார் சேலத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர்.

6 செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு ரத்து

வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

7 அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல் நல்லடக்கம்

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலிற்கு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

8 சிறையில் கஞ்சா புழக்கம்? - போலீஸ் அதிரடி சோதனை

சேலம் மத்திய சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து அங்கு காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

9 கொடைக்கானல் புதிய கட்டுப்பாடு - சுற்றுலாப் பயணிகள் குழப்பம்

கொடைக்கானலில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகளால் சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

10 பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர் - காவல் துறை கொடுத்த பரிசு

சென்னையில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.