ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 9 AM - இன்றைய செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 9 am
Top 10 news @ 9 am
author img

By

Published : Jun 27, 2021, 9:16 AM IST

1.'கனிம வருவாய் ரூ.161 கோடி ஈட்டப்பட்டுள்ளது' - நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன்

ஏப்ரல், மே மாதங்களில் கனிம வருவாய் ரூ. 161 கோடி ஈட்டப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, அரசு அலுவலர்கள் அரசுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்டித்தருமாறு செயல்பட, நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார்.

2. 'ஒரு லட்சத்து 42 ஆயிரம் கூடுதல் கரோனா இறப்புகள்' - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

ஜனவரி 1 முதல் ஜூன் 25 வரையிலான காலகட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் குறித்து அரசு வெளியிட்டுள்ளத் தகவலைவிட, ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 143 கூடுதல் இறப்புகள் நிகழ்ந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது.

3.கொடைக்கானலில் யானைகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

அஞ்சு வீடு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலங்களை யானைகள் சேதப்படுத்திச் சென்றதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

4. ராமநாதபுரத்தில் நியாயவிலைக்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகப் புகார்

கருங்குளம் கிராம நியாய விலைக்கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

5. அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன - கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை அறிக்கை

நிலக்கரி அனல் மின் நிலையங்கள் சுற்றுச்சூழலுக்கு சவாலாக இருந்தன என்று கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6. 'போதிய விலை கிடைக்கவில்லை...' - மலர் விவசாயிகள் வேதனை

திண்டுக்கல் மாவட்டத்தில் சம்பங்கிப்பூக்கள் பயிரிட்டிருக்கும் விவசாயிகள், போதிய விலை கிடைக்காததால் மலர்களைப் பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

7. சிறுமியை மிரட்டி நகை, பணம் பறித்த இளைஞர் கைது

வாணியம்பாடியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதோடு, 6 சவரன் நகைகள், ரூ. 2 லட்சம் ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

8. தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் - முன்னாள் அமைச்சர் தங்கமணி

மின்தட்டுப்பாடு மற்றும் தேவையை சமாளிக்க அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டதாக முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

9. இந்திரா காந்தி போட்டியிலேயே இல்லை...மோடி மட்டும் தான் - நக்கலடித்த சித்தார்த்

நடிகர் சித்தார்த் மீண்டும் பிரதமர் மோடியை கலாய்த்து பதிவிட்ட ட்வீட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்று வருகிறது.

10. ஒலிம்பிக் சாம்பியனுக்கு நேர்ந்த பரிதாபம்!

ஒலிம்பிக் தடகளத்தில் நான்கு முறை சாம்பியனான மோ ஃபரா லண்டனில் நடந்த தகுதித் சுற்றில் தகுதி பெறத் தவறிவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.