ETV Bharat / state

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9 Am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 news @ 9 AM
Top 10 news @ 9 AM
author img

By

Published : Jan 15, 2021, 9:20 AM IST

தமிழ்நாட்டில் மேலும் 665 நபர்களுக்குக் கரோனா

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 665 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. அதேநேரம் இறப்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் மாறியுள்ளது.

முதலமைச்சரான பிறகு எனது முதல் கையெழுத்து... சூளுரைக்கும் திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சராகப் பொறுப்பேற்றபிறகு, தனது முதல் கையெழுத்து விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதற்காக போடப்படும் என ஆவடியில் திமுக தலைவர் மு.க‌.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு... தயாராகும் காளைகளும், காளையர்களும்: காத்திருக்கும் பரிசுகள்!

மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டில் வெற்றி பெறும் வீரருக்கு காரும், வெற்றி பெறும் காளைகளுக்கு காங்கேயம் பசு மாடும் பரிசாக வழங்கப்படும் என விழா கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் தோன்றிய இடம் தமிழ்நாடு - ஜெ.பி. நட்டா

சென்னை: நாயன்மார்கள், ஆழ்வார்கள் தோன்றிய இடம் தமிழ்நாடு என்றும், மொழியின் வளர்ச்சி மற்றும் கலாசார மேம்பாட்டிற்காக சேர, சோழ, பாண்டியர்கள், பல்லவர்கள் பெரும் பங்காற்றியுள்ளார்கள் என்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா புகழ்ந்து தள்ளியுள்ளார்.

2ஜி மேல்முறையீடு வழக்கு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைக்கத் தொடங்கிய சிபிஐ!

டெல்லி : 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கிலிருந்து ஆ.ராசா உள்ளிட்ட 17 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கில் சிபிஐ தனது வாதங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்வு - தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் மஞ்சளார் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 55 அடியை எட்டியதால் தேனி, திண்டுக்கல் மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கபா டெஸ்ட்: சிராஜ், ஷர்துல் அசத்தல்; தடுமாற்றத்தில் ஆஸி.,

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது.

திருச்சியில் ஜல்லிக்கட்டு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

திருச்சி: பெரிய சூரியூரில் நாளை(ஜன.15) நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு பேட்டி வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழரும் ஜல்லிக்கட்டும்- வீரம் செறிந்த காதல் கதை!

வரலாற்றின் மிக தொன்மையான விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

'தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை' - சுகாதாரத் துறை செயலாளர்!

திருச்சி: தமிழ்நாட்டில் பறவை காய்ச்சல் இல்லை என சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.