ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 AM - chennai

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

9 am
9 am
author img

By

Published : Nov 3, 2020, 9:30 AM IST

'கடவுளை கொச்சைப்படுத்துவது தான் ஸ்டாலினின் வேலை' - பொன்.ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: "கடவுளை கொச்சைப்படுத்துவதை மட்டுமே ஸ்டாலின் தனது விருப்பமாக கொண்டுள்ளார். இதற்காக அவர் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்று முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பட்டாசு தடைக்கு மறுபரிசீலனை - ராஜஸ்தான் முதலமைச்சருக்கு மாணிக்கம் தாகூர் கோரிக்கை

விருதுநகர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகளை தடை செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அம்மாநில முதலமைச்சருக்கு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

முத்துகோரமலையின் ரம்மியமான காட்சி!

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலத்தில் ஒன்றான முத்துகோரமலைக்கு தற்போது அதிக இளைஞர்கள் சென்று வருகின்றனர். அதன் உச்சியில் நின்று பார்த்தால் இயற்கை மிக அற்புதமானது என புரியவைக்கிறது, இந்த காணொலி!

பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

சென்னை: திருமண ஆசை காட்டி 12ஆம் வகுப்பு மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை ஆவடி காவல் துறை கைது செய்து வழக்குப் பதிந்து சிறையில் அடைத்தனர்.

எம்.எஸ்.எம்.இ அவசர கால கடனளிப்பு உத்தரவாத திட்டம் நவ30 வரை நீட்டிப்பு!

எம்.எஸ்.எம்.இ அவசர கால கடனளிப்பு உத்தரவாத திட்டம் (இ.சி.எல்.ஜி.எஸ்) நவ30 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் இதுவரை ரூ.3 லட்சம் கோடி என்ற இலக்கை அடைய தவறிவிட்டது.

ஊழலைத் தடுக்க வேண்டிய அலுவலரே லஞ்சம் வாங்கிய அவலம்

மதுரை: குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

பெங்களூருவை வீழ்த்திய டெல்லி: இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்!

அபுதாபி: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. அதனோடு ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு அணியும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தனியார் துணிக்கடை காவலாளிக்கு அரிவாள் வெட்டு : பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!புதுச்சேரி : அண்னா சாலையிலுள்ள தனியார் துணிக்கடை முன்பு உறங்கிக் கொண்டிருந்த காவலாளியை அரிவாளால் வெட்டிய நபர்களை சிசிடிவி காட்சியைக் கொண்டு காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது?

அமெரிக்க அதிபரை அந்நாட்டு மக்கள் நேரடியாக தேர்ந்தெடுப்படுவதில்லை, மாறாக எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். இந்த எலக்டோரல் காலேஜ் உறுப்பினர்களே அதிபரைத் தேர்ந்தெடுப்பார்கள்.

பிரான்ஸிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் இந்தியா வருகை!

பிரான்ஸ் நாட்டிலிருந்து மேலும் மூன்று ரஃபேல் விமானங்கள் நவம்பர் 4ஆம் தேதி இந்தியா வரவிருக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.