ETV Bharat / state

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9AM

author img

By

Published : Dec 15, 2020, 9:01 AM IST

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்தி சுருக்கம்...

ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9AM
ஈடிவி பாரத் 9 மணி செய்தி சுருக்கம் Top 10 news @9AM

1. சித்ரா தற்கொலை வழக்கில் கணவர் ஹேம்நாத் கைது!

சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

2. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் படகு இல்லங்கள்!

காஷ்மீரின் சுற்றுலாவும் புகழ்பெற்ற தால் ஏரியும் படகு இல்லங்களின்றி முழுமைபெறாது. வெள்ளை பனிசூழ பளபளப்பான ஏரியின் மீது மிதக்கும் படகு இல்லம் குறித்து சிறப்புச் செய்தித் தொகுப்பு.

3. நெருங்கும் பேரவைத் தேர்தல்: 10 ஆண்டின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் அதிமுக!

சென்னை: ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவின் கடந்த 10 ஆண்டுகால சாதனைகளை மக்கள் முன் கொண்டுபோய்ச் சேர்க்கும் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

4. திருமணத்தை தாண்டிய உறவை மறைக்க சிறுமியை கொன்று வீசிய உறவினர்!

பாலசோர்: ஒடிசாவில் 7 வயது சிறுமியை அவரது மாமா கொடூரமாக கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

5.தமிழ்நாட்டில் 2,391 அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதி

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள இரண்டாயிரத்து 931 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை குடிநீர் சுற்றுச் சுவர் வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

6. நடப்பாண்டில் நாட்டின் நெல் கொள்முதல் 21% உயர்வு

இந்திய உணவுக்கழகம் கடந்தாண்டில் டிசம்பர் வரை 310.71 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்திருந்த நிலையில், நடப்பாண்டில் அது 375.72 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

7. ஐஎஸ்எல்: டிராவில் முடிந்த மும்பை - ஜாம்ஷெட்பூர் ஆட்டம்!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் டிசம்பர் 14 நடைபெற்ற மும்பை சிட்டி எஃப்சி - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

8. பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிராக லாகூரில் மாபெரும் மக்கள் பேரணி!

லாகூர்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு எதிராக லாகூரில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் சார்பில் மக்கள் பேரணி நேற்று (டிச.13) நடத்தப்பட்டது.

9.சிரியஸ்எக்ஸ்எம்-க்கு புதிய தலைமுறை செயற்கைக்கோளை ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

ஸ்பேஸ்எக்ஸின் பால்கான் 9 ராக்கெட் மூலம் புதிய தலைமுறை வானொலி ஒலிபரப்பு செயற்கைக்கோள் ஞாயிற்றுக்கிழமை விண்வெளியில் செலுத்தப்பட்டது. எஸ்.எக்ஸ்.எம் 7 செயற்கைக்கோள் சிரியஸ்எக்ஸ்எம்-இன் செயலில் உள்ள கடற்படையில் சேரவுள்ளது. மேலும் அமெரிக்கா, கனடா, புவேர்ட்டோ ரிக்கோ, கரீபியன் ஆகிய நாடுகளுக்கு 15 ஆண்டுகள் வரை பொழுதுபோக்கு, தரவு சேவைகளை வழங்க இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

10. பூஜையுடன் தொடங்கியது மிஷ்கினின் ‘பிசாசு 2’

இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படமான “பிசாசு 2” பூஜையுடன் இன்று (டிசம்பர் 14) தொடங்கியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.