ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM - தமிழ் செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
இரவு 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 25, 2021, 7:04 PM IST

IPL 2021: டெல்லியின் பவர் பேட்டிங்கை கட்டுப்படுத்திய ராஜஸ்தான்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்களை எடுத்துள்ளது.

90 வயதில் கார் ஓட்ட கற்றுக்கொண்டு அசத்திய பாட்டி...

மத்திய பிரதேசத்தில் 90 வயது பாட்டி ஒருவர் காரை ஓட்டி அசத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

‘கொலை சம்பவங்களை தடுக்கவே ஆலோசனை கூட்டம்’ - டிஜிபி சைலேந்திரபாபு

தென்மாவட்டங்களில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்கவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்த வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

தனியார் வன பாதுகாப்பு சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்மூல் செயலி மூலம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்தவர் கைது

பாடல் விரும்பிகளுக்காக கொண்டுவரப்பட்ட ஸ்மூல் செயலியின் மூலம் கிடைத்த நட்பை பயன்படுத்தி, கல்லூரி மாணவிகள், திருமணமான பெண்கள் உள்ளிட்டோரை குறிவைத்து பணம், நகைகளை பறித்து மோசடி செய்த நபர் காவல் துறையினரிடம் சிக்கியது குறித்த தொகுப்பு...

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்ய வேண்டும் - சு. வெங்கடேசன் எம்பி

அஞ்சல் பணி நியமன முறையில் மாற்றம் செய்து மாநில மொழி அறிவை உறுதி செய்ய வேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

திமுக வந்தால் ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள்' - எடப்பாடி பழனிசாமி

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப்.25) கலந்துகொண்டார். அப்போது அவர் திமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள், அதற்கு எடுத்துக்காட்டுதான் தமிழ்நாட்டில் ஒரே நாளில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பேசினார்.

எஸ்பிபி மறைந்த தினம்: நினைவுகூர்ந்த மோகன்லால், மம்மூட்டி!

மறைந்த பாடகர் எஸ்பிபியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கேரள முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் #SPBalasubrahmanyam என்ற ஹேஷ்டேக் மூலம் அவரை நினைவுகூர்ந்து தங்களது ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

சைமா விருது: ஏ.ஆர். ரஹ்மானாக மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்!

தமிழ், தெலுங்கில் வெளியான இரண்டு திரைப்படங்களுக்காக சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்ட ஐஸ்வர்யா இரண்டு சைமா விருதுகளைத் தட்டிச் சென்றார்.

கரோனா நோயாளிகளை கண்காணிக்கும் வயர்லெஸ் சென்சார் கருவி!

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை எளிமையாக கண்காணிக்கும் வகையில் இந்தியாவிலேயே முதல் முறையாக வயர்லெஸ் சென்சார் கருவிகள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.