ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்...

Top 10 news @7PM
செய்தி
author img

By

Published : Jan 14, 2021, 7:22 AM IST

தமிழ்நாட்டில் புதிதாக 673 பேருக்கு கரோனா உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜனவரி 13) புதிதாக 673 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

ட்ரம்புக்கு கெட் அவுட் சொன்ன அமெரிக்க நாடாளுமன்றம்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ட்ரம்ப்பை நீக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையானோர் வாக்களித்துள்ளனர்.

ஜன.26 டிராக்டர் பேரணியை நினைத்து மத்திய அரசு தடுமாறுகிறது!

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் குறித்து கவலைக்கொள்ளாத மத்திய அரசு, ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் அறிவித்துள்ள டிராக்டர் பேரணியை நினைத்து தடுமாறுகிறது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகள் வழங்க உத்தரவு!

சென்னை: 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாத்திரைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது!

சென்னை: பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் சம்பந்தப்பட்ட அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும் எனவும், மாணவர்களை பள்ளிக்கு வருவதற்கு கட்டாயப்படுத்த கூடாது எனவும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சண்முகம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள் கொண்டாடும் 'மாஸ்டர்' பொங்கல்

தேர்தல் ஜூரம் தமிழ்நாட்டில் பற்றிகொண்டுள்ளதால் அனைத்து தலைவர்களும் வித்தியாசமான முறையில் பொங்கலை பொதுமக்களுடன் கொண்டாடுகின்றனர்.

சிறப்பு தேர்வர்களுக்கு கட்டணம் செலுத்த அவகாசம் அளித்த அண்ணா பல்கலைக்கழகம்!

சென்னை : அரியர்ஸ் தேர்வெழுதவுள்ள தேர்வர்கள் பாடங்களுக்கான கட்டணத்துடன் ரூ.5 ஆயிரத்தைச் சிறப்பு கட்டணமாக வரும் 30ஆம் தேதிக்குள் செலுத்தி பதிவு செய்துகொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27ஆம் தேதி திறப்பு?

சென்னை : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு உத்தரவை மீறிய திரையரங்குகள் மீது வழக்குப்பதிவு

சென்னை: அரசு உத்தரவை மீறி 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததிரையரங்குகள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இரண்டரை கோடி பயனாளர்கள்: வாட்ஸ்அப்பால் ஹிட்டான டெலிகிராம்!

கடந்த மூன்று நாள்களில் டெலிகிராம் செயலியில் புதிதாக இரண்டரை கோடி பயனாளர்கள் இணைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.