ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7 PM

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்...

7 மணி செய்திச் சுருக்கம்
7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Dec 19, 2020, 7:08 PM IST

மத்திய அரசு நல்லது செய்தாலும் எதிர்க்க வேண்டும் என்பதே கமல் ஹாசனின் எண்ணம் - எல். முருகன் சாடல்

மத்திய அரசு நல்லது செய்தாலும் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசனின் ஒரே எண்ணமாக உள்ளது என தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

'பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

மதுரை: பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

விமானத்தில் கடத்திவந்த ரூ.87.6 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

சென்னை: துபாயிலிருந்து சென்னை வந்த மீட்பு விமானத்தில் கடத்தி கொண்டுவரப்பட்ட 87 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திராவுக்கு எடுத்து செல்ல முயன்ற லாரி பறிமுதல்

ராணிப்பேட்டை: சிப்காட் பகுதியில் மருந்து தயாரிக்கும் மல்லாடி டிரக்ஸ் நிறுவனத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆந்திராவிற்கு எடுத்துச் செல்ல முயன்ற லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பாஜகவில் இணைந்தார் முன்னாள் திரிணாமுல் காங். எம்எல்ஏ சுவேந்து அதிகாரி

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுவேந்து அதிகாரி அமித்ஷா முன்னிலையில் (இன்று டிச.19) இன்று அக்கட்சியில் இணைந்தார்.

இஸ்ரோ: இந்தியாவின் வெற்றிக்குதிரை!

இந்திய ஒன்றியத்தின் முக்கியக் கூறாக கருதப்படுகிறது இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்). பிஎஸ்எல்வியை விண்ணில் செலுத்திய பிறகு, பல நாடுகள் முடியாது என கருதிய விடயத்தை இந்தியா சாத்தியப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

கோவிட்-19 பெருந்தொற்று பரவலால் ஏற்பட்ட வருமான இழப்பை சரிகட்டும் வகையிலும், கூடுதல் வருமானத்தை கவனத்தில் கொண்டும் மத்திய-மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீது கலால் மற்றும் வாட் வரியை அதிகப்படுத்தியுள்ளன. தலைநகர் டெல்லியில் பெட்ரோல், டீசலில் இதன் பங்களிப்பு 63 மற்றும் 60 விழுக்காடு ஆக உள்ளது.

அமெரிக்காவை ஒருங்கிணைப்பதே ஜோ பைடன் ஆட்சியின் முதல் சவால்

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஏற்படுத்திய பாதிப்புகளை சரி செய்து நாட்டினை ஒருங்கிணைப்பது தான், விரைவில் அந்நாட்டின் அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடன் தலைமையிலான அரசின் முதல் சவாலாக இருக்கப்போகிறது.

மருத்துவமனையில் முகமது ஷமி; அடுத்த போட்டியில் பங்கேற்பாரா?

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில் காயமடைந்த முகமது ஷமி, ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சித்ராவின் குடும்பத்தினரையும் விசாரிக்க வேண்டும் - ஹேம்நாத்தின் தந்தை வலியுறுத்தல்

சென்னை: சித்ரா தற்கொலை குறித்து தற்போது சமூக வலைதளங்களில் வரும் தகவல்களையும் ஆராயவேண்டும் என ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.