ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM - top 10 news etv bharat tamil

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம்.

top-10-news-at-7pm
top-10-news-at-7pm
author img

By

Published : Jul 14, 2020, 7:04 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

கரோனா சூழலில் காவலர்களுக்கு டார்ச்சர் - யார் இந்த சஹாப் சிங்?

பெங்களூரு: உடுப்பி மாவட்டத்தில் 163 முறை கரோனா தடுப்பு விதியை மீறியவர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் பாடப்புத்தகம்

சென்னை: அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு 15ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பல்கலை, கல்லூரித் தேர்வுகளுக்குத் தடைக் கோரி வழக்கு!

சென்னை: யுஜிசி உத்தரவின்படி பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகளை நடத்தத் தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 77 விழுக்காடாக உயர்ந்த குணமடைந்தோர் எண்ணிக்கை

சென்னை: மாநகராட்சி முழுவதும் கரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் எண்ணிக்கை 60 விழுக்காட்டில் இருந்து 77 விழுக்காடாகவும் உயர்ந்துள்ளது.

கரோனா நோயாளி காணாமல் போன விவகாரம்: காவல் ஆய்வாளர் பதிலளிக்க உத்தரவு

சென்னை: கரோனா தொற்று காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவர் மாயமான விவகாரத்தில் பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை(ஜூலை 15) பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'வாழ்நாள் முழுவதும் காதலிப்பேன்'- சுஷாந்த் சிங் காதலி உருக்கம்!

சுஷாந்த் சிங் மறைவு குறித்து அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிசிசிஐயின் இடைக்கால சிஇஓ: ஹேமங் அமின் நியமனம்

டெல்லி: பிசிசிஐயின் இடைக்கால தலைமைச் செயல் அலுவலராக ஹேமங் அமின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய-சீன பிரச்னை: இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை

டெல்லி: கிழக்கு லடாக்கின் சுஷூலில் இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இதில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இருநாட்டு படைகளைத் திரும்பப் பெறுவதில் முக்கியக் கவனம் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

தொடரும் இன அழித்தொழிப்பு: ஸ்ரெப்ரெனிக்கா படுகொலைகளை நினைவில் கொள்வோம்!

இன அழித்தொழிப்பு என்னும் மானிடப் பெருந்துயர் நிகழவே கூடாது. ஆனால், பல சமயங்களில், சர்வதேச சமூகம் வாய்மூடி மௌனமாக ஏதும் செய்ய இயலாமல் கையறு நிலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, படுகொலைகள் நடந்தேறியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.