ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம்...Top 10 news @7am

author img

By

Published : Mar 25, 2021, 7:02 AM IST

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ..

Top 10 news @7am
Top 10 news @7am

'தோல்வி பயத்தால் முதலமைச்சர் சாபம் விடுகிறார்' - கனிமொழி

கடலூர்: "முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தால் அனைத்துக் கட்சியினருக்கும் சாபம் விடுகிறார்" என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

'இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர்' - விஜயபிரபாகரன் காட்டம்

தூத்துக்குடி: "இலவசங்களை வழங்கி மக்களை முட்டாளாக வைத்துள்ளனர். அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களின் பின்னால் மிகப் பெரிய மூலதனம் இருக்கும்" என தேமுதிக தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

'திரும்பவும் வந்துறாத' - பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்ட அமமுக வேட்பாளர்

தேர்தல் பரப்புரையின் போது சாத்தூர் அமமுக வேட்பாளர் ராஜவர்மனுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றமால் மீண்டும் ஓட்டு கேட்டு வந்துள்ளீர்களா?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

முக்கூடல் அருகே கொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் குடும்பத்தினருக்கு உதயநிதி ஆறுதல்

திருநெல்வேலி: முக்கூடல் அருகே படுகொலை செய்யப்பட்ட திமுக பிரமுகரின் குடும்பத்தினருக்கு அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

படிப்புடன் தோட்டக்கலை கல்வியைத் தரும் பிகார் பள்ளி ஆசிரியர்

பிகார் அரசு அம்மாநிலத்தின் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் இயற்கை சமையலறை தோட்டங்களை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

110 வயது மூதாட்டியுடன் பேச்சு கொடுத்த ராஜேந்திர பாலாஜி

விருதுநகர்: தேர்தல் பரப்பரையின் போது, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தின்ணையில் அமர்ந்து கொண்டு 110 வயது மூதாட்டியிடம், சகஜமாக பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கழுத்தில் ருத்ராட்சம், கையில் சிலுவை, தலையில் குல்லா.. சுயேச்சை வேட்பாளரின் பரப்புரை பாணி

கழுத்தில் ருத்ராட்சம் மாலை, தலையில் குல்லா, ஒரு கையில் சிலுவை, மற்றோரு கையில் உடுக்கை என வித்தியாசமான தோற்றத்துடன் கோவை கிணத்துக்கடவு சட்டப்பேரவை தொகுதி சுயேச்சை வேட்பாளர் நூர் முகமது பரப்புரை மேற்கொண்டார்.

'தி.மலையில் கிரிவலம் செல்ல பக்தர்கள் வர வேண்டாம்'

திருவண்ணாமலை: கரோனா தொற்று பரவல் காரணமாக பௌர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

திமுக ஆட்சியில் ஏராளமான வேலைவாய்ப்புகள்' - ஸ்டாலின் உறுதி

"இளைஞர்களுக்கு சுய முன்னேற்றக் குழுக்கள், மாவட்டந்தோறும் பெண்கள் திறன்மேம்பாட்டு மையங்கள், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை எனத் திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் ஏராளமாக உருவாக்கப்படும்" என்று முக ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

'பேரலாகிவிட்டது பெண்களின் இடுப்பு' - லியோனியின் ரசனைப் பேச்சால் சர்ச்சை

ஒருகாலத்தில் எட்டுப் போல இருந்த பெண்களின் இடுப்பு, தற்போது பேரல் போல மாறிவிட்டது என்று ரசனையுடன் பேசிய பட்டிமன்ற புகழ் ஐ. லியோனி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.