ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @7 AM - 7 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம் இதோ....

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Mar 17, 2021, 7:29 AM IST

அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்ட கூட்டத்தில் விதிமீறல்: 200 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்ட கூட்டத்தில் விதிகளை மீறி செயல்பட்டதாக 200 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். மீதான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராக, ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தபால் வாக்குக்கு எதிரான வழக்கு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

சென்னை: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்க அனுமதி வழங்கும் சட்டப்பிரிவுகளை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

இறந்த நிலையில் சிறுவனின் உடல்... குண்டூர் கொடூரம்...நடந்தது என்ன?

ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் சிறுவன் கடத்தப்பட்ட நிலையில், இறந்த நிலையில் அவனது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோயிலுக்கு 3000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்!

உத்தரப்பிரதேசம்: அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் ஒன்றைக் கட்டுவதற்காக, இதுவரை 3,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்யப்பட்டுள்ளது.

பின்விளைவுகளை ஏற்படுத்துகிறதா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி...பயன்பாட்டுக்கு தடைவிதிக்கும் ஐரோப்பிய நாடுகள்!

ஸ்டோக்ஹோம்: அஸ்ட்ராஜெனெகா மருந்து நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நாடுகள் தடைவிதித்துவரும் நிலையில், ஸ்வீடன் அத்தடுப்பூசியின் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டது.

Ind vs Eng: பட்லர் அதிரடியில் மண்ணைக் கவ்விய இந்தியா!

இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

ஆடவர் அணியின் பயிற்சியாளராக மாறிய கிரிக்கெட் வீராங்கனை!

இங்கிலாந்து மகளிர் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் வீராங்கனையாகத் திகழ்ந்த சாரா டெய்லர், கவுண்டி அணிகளும் ஒன்றான சசெக்ஸ் ஆடவர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய டாப் இயக்குநர்கள்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளை கெளதம் மேனன், மணிரத்னம் உள்ளிட்ட டாப் இயக்குநர்கள் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பழம்பெரும் நடிகை ஜெயசித்ரா மகன் கைது!

சென்னை: பழம்பெரும் நடிகை ஜெயசித்ராவின் மகனை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் மோசடி வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.