ETV Bharat / state

இரவு 7 மணி செய்திச் சுருக்கம் - 7 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்...

Top 10 news  @ 7 PM
Top 10 news @ 7 PM
author img

By

Published : Oct 10, 2021, 7:12 PM IST

1. 'அதிமுகவில் சில மாற்றங்கள் செய்வது அவசியம்' - செல்லூர் ராஜூ

அதிமுகவில் சில மாற்றங்கள் செய்து, கட்சியை வளர்க்க வேண்டியது அவசியமாக உள்ளது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

2. ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம்; முதலமைச்சர் ஆய்வு!

தமிழ்நாடு முழுவதும் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதையடுத்து, சென்னை சின்னமலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

3. சசிகலா மீண்டும் அரசியல் பயணம்... சேலத்தில் சின்னம்மா பேரவைக் கூட்டம்... பரபரக்கும் அரசியல் களம்

சசிகலா விரைவில் அரசியல் வரவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட 'தமிழக தியாக தலைவி சின்னம்மா பேரவையின்' முதல் ஆலோசனைக் கூட்டம் சேலம், ஓமலூர் அடுத்துள்ள பண்ணப்பட்டி பகுதியில் நடைபெற்றது.

4. தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!

கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக ரூ.30-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, ரூ.65 வரை விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5. அடுத்த 3 மாதங்கள் மிக கவனம் தேவை - எச்சரித்த ராதாகிருஷ்ணன்

டெங்கு காய்ச்சலால் தமிழ்நாட்டில் 300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்; அடுத்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

6. மூத்த கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்!

தமிழ், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் 650க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கன்னட மூத்த நடிகர் சத்யஜித் காலமானார். அவருக்கு வயது 72.

7. இந்தியாவில் கோவிட் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரிப்பு!

இந்தியாவில் கோவிட் பெருந்தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மீட்பு விகிதம் 97.99% ஆக அதிகரித்துள்ளது.

8. ஆன்லைன் ரம்மியால் நேர்ந்த விபரீதம்!

வாணியம்பாடி அருகே ஆன்லைன் ரம்மி விளையாடக்கூடாது என்று பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

9. கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் - தனி கமிட்டி அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

கண்டெய்னர் லாரிகளில் அதிக பாரம் ஏற்றுவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தனி கமிட்டி ஒன்று அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

10. தமிழ்நாட்டில் 331 பேருக்கு டெங்கு காய்ச்சல் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

தமிழ்நாடு முழுவதும் 331 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.