ETV Bharat / state

7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச்சுருக்கம்...

7 மணிச் செய்திச் சுருக்கம்
7 மணிச் செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 1, 2021, 7:17 PM IST

1. சந்தேகத்திற்கிடமான முறையில் சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசம் - போலீஸ் விசாரணை

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நிறுத்தியிருந்த சொகுசு கார்கள், இருசக்கர வாகனங்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் எரிந்து கிடந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2. அரும்பாக்கத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது: மாநகராட்சி

அரும்பாக்கத்தில் எஞ்சிய மக்களுக்கு வீடுகள் ஒதுக்கி, மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்பை அகற்றக்கூடாது என சென்னை மாநகராட்சித் தெரிவித்துள்ளது.

3. கொலை வெறி தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது குண்டாஸ்

ராமநாதபுரத்தில் முன்விரோதம் காரணமாக ஒருவரை தாக்கிய நான்கு பேரை காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

4. ரயிலைத் துளையிட்டு புடவைகள் திருட்டு - செல்போன் சிக்னல் மூலம் திருடன் கைது

சென்னையில் 2019ஆம் ஆண்டு ரயிலைத் துளையிட்டு புடவைகளைத் திருடிச் சென்ற திருடனை சென்னை ஆர்.பி.எப் காவல் துறையினர் கைது செய்தனர்.

5. பென்னிகுயிக் வாழ்ந்த இடத்தை இடித்து கலைஞர் நூலகமா? - அதிமுக கண்டனம்

சென்னை: மதுரையில் பென்னிகுயிக் நினைவு இல்லத்தை இடித்து கலைஞர் நூலகம் அமைக்கப்படுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

6. யமுனா ஆற்றின் நீர் மட்டம் அதிகரிப்பு... 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்!

யமுனா ஆற்றின் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை நெருங்கியுள்ளதால், 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

7. ஜான்குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் வாய்ப்பு?

சிறுபான்மையினரைக் கவரும் விதத்தில், ஜான் குமாருக்கு புதுச்சேரி பாஜக தலைவர் பதவி ஒதுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

8. பூஞ்ச் எல்ஓசியில் கண்ணி வெடி... கண்டுபிடித்த ஜூலி!

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியைப் பாதுகாப்புப் படையினர் அப்புறப்படுத்தினர்.

9. உ.பி.,யில் மீண்டும் பாஜக ஆட்சியில் அமரும் - அமித் ஷா

உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

10. அசாம் முதலமைச்சருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறத் தயார் - மிசோரம் அரசு

அசாம் முதலமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆரை திரும்பப் பெற தயாராக உள்ளதாக மிசோரம் தலைமைச் செயலாளர் லால்நுன்மாபியா சுவாங்கோ தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.