ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - Top 10 new

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 3, 2020, 5:04 PM IST

நல்லாசிரியர் விருதுக்கு அரசியல் தொடர்பு உள்ளவர்களை தேர்வு செய்யக்கூடாது: பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதிற்கு, அரசியல் தொடர்பு உள்ளவர்களைத் தேர்வு செய்யக்கூடாது என, பள்ளிக் கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

'ஐஐடிகளில் சமூக நீதி எப்போது?' - சு.வெங்கடேசன் எம்.பி., கேள்வி!

மதுரை: மத்திய அரசின் மிக முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சமூக நீதியைப் பின்பற்ற வலியுறுத்தி, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு மதுரை மக்களவை உறுப்பினர் கடிதம் எழுதியுள்ளார்.

கரோனா அச்சம்? - 'ஹார்பிக்' குடித்து பெண் அலுவலர் தற்கொலை!

சென்னை: பெண் தடயவியல் துறை அலுவலர் கழிவறை ஆசிட் குடித்து, தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தற்கொலையா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சரவணபவன் சாம்பாரில் கிடந்த பல்லி - வழக்குப்பதிவு செய்தது போலீஸ்!

டெல்லி: பிரபல உணவகமான சரவண பவனில் பரிமாறப்பட்ட உணவில், பல்லி இருப்பதைக் கண்ட வாடிக்கையாளர் அந்த உணவகம் மீது காவல் துறையில் புகாரளித்தார்.

சீனப் பொருள்கள்: ஒருபுறம் புறக்கணிப்பு… மறு புறம் தக்கவைப்பு… உமர் அப்துல்லா விமர்சனம்

ஸ்ரீநகர்: சீனப் பொருள்கள், நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும் என மத்திய அரசு கூறிவரும் வேளையில், ஐபிஎல் தொடருக்கான விளம்பரதாரராக சீன நிறுவனங்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது என தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.

6 வயது மகளை கழுத்தறுத்துக் கொன்று தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த பெண்!

திருவண்ணாமலை: இறந்த மாமனார், மாமியார் அசரீரி குரலில் அழைத்ததாகக் கூறி, தான் பெற்ற குழந்தையை கழுத்தறுத்துக்கொலை செய்த தாய், அதன்பின் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் சிறுபாக்கம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ராத் பந்துவீச்சை எதிர்கொள்ள விருப்பம் காட்டிய ஹிட்மேன்!

கடந்த காலங்களிலிருந்து ஒரு பந்துவீச்சாளரை எதிர்கொள்ள வேண்டும் என்றால், தான் மெக்ராத்தை தேர்வு செய்வேன் என இந்திய வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

'நான் கிழவி என்றால் அஜித் யார்?' - அஜித் ரசிகர்களை சாடிய கஸ்தூரி!

நடிகை கஸ்தூரி, அஜித் ரசிகர்களை சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்த மலாக்கா அரோரா!

நடிகை மலாக்கா அரோரா, தனது சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'ரஜினிகாந்தை நேரில் சந்தித்தேனா?' இயக்குநர் தேசிங் பெரியசாமி விளக்கம்!

இயக்குநர் தேசிங் பெரியசாமி, தான் ரஜினிகாந்தை சந்திக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.