ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 5 PM - etv bharat

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்.

5 மணி செய்திச் சுருக்கம்
5 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Aug 10, 2021, 5:25 PM IST

1 அண்ணா பல்கலை துணைவேந்தராக ஆர். வேல்ராஜ் நியமனம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய துணை வேந்தராக வேல்ராஜை நியமனம் செய்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

2 திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது- எஸ்.பி. வேலுமணி மைத்துனர்

அதிமுகவினர் மீது திமுக பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறது என எஸ்.பி. வேலுமணியின் மைத்துனர் தெரிவித்துள்ளார்.

3 சரியும் தங்கம் விலை: மகிழ்ச்சியில் நகை வாங்குபவர்கள்

இன்றைய (ஆக. 10) ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 34,984-க்கு விற்பனையாகிறது.

4 மதுபானம் அருந்தியவருக்கு மூக்கில் ரத்தம் - மது பிரியர்கள் பீதி

அரசு மதுபானக்கடையில் மதுபானம் வாங்கி அருந்திய மதுப்பிரியருக்கு மூக்கில் ரத்தம் வந்ததால், அங்கு மது அருந்திக்கொண்டிருந்த மது பிரியர்கள் பீதியடைந்தனர்.

5 கூட்டுறவு சங்க நிலத்தை குத்தகைக்கு வழங்கியவர்கள் இடைநீக்கம் - உத்தரவு ரத்து

கூட்டுறவு சங்க நிலத்தை குத்தகைக்கு வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக தலைவர் மற்றும் துணைத் தலைவரை இடைநீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 திருநெல்வேலியில் விளம்பரப் பலகைகள் அகற்றம்

திருநெல்வேலி மாநகர் முழுவதும் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் அகற்றும் பணி நடைபெறுகிறது.

7 கடல் அட்டைகள் கடத்தல் - அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

இராமேஸ்வரம் அருகே கடல் அட்டைகள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்தி சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

8 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க துடிப்பது ஏன்? - சு. வெங்கடேசன் எம்பி

இந்தியாவிலுள்ள 171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டி வரும் நிலையில் அவற்றை ஒன்றிய அரசு ஏன் தனியாருக்கு விற்கிறது என மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

9 கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுப்பு ஏன்?... அமைச்சர் விளக்கம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே கோயில்களில் சாமி தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என சமூகநலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

10 அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள்...மாநில இடஒதுக்கீடு எப்படி பொருந்தும் - உயர் நீதிமன்றம் கேள்வி

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை ஒன்றிய அரசுக்கு ஒதுக்கிய பின் தமிழ்நாடு இட ஒதுக்கீடு அதற்கு எப்படி பொருந்தும்? என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், அந்த இடங்கள் திரும்ப வழங்கப்பட்டால் மட்டுமே தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டை பின்பற்ற முடியும் என தெரிவித்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.