ETV Bharat / state

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - 5 மணி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திச் சுருக்கம்...

top-10-news-at-5-pm
top-10-news-at-5-pm
author img

By

Published : Sep 21, 2020, 5:00 PM IST

  • வேளாண் மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் - திமுக கூட்டணி முடிவு

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வரும் 28 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அறிவித்துள்ளன.

  • விவசாயிகள் தற்கொலைப் பற்றி பல மாநில அரசுகள் முறையாக தகவல் அளிப்பதில்லை - மத்திய உள்துறை இணை அமைச்சர்

விவசாயிகள் தற்கொலைப் பற்றிய தகவல்களை பல மாநில அரசுகள் அளிப்பதில்லை என மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.

  • கேரள அமைச்சர் ஜலீலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: காவல் துறையினர் வழக்குப்பதிவு!

திருவனந்தபுரம்: கேரள அமைச்சர் ஜலீல் பதவியை ராஜினாமா செய்யக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நூறு பேர் வரை கைது செய்துள்ளனர்.

  • அடிப்படை வசதிகளை செய்து தர அரசு மறுக்கிறது: திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றச்சாட்டு

வேலூர்: எதிர்க்கட்சி என்பதற்காக தொகுதி மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர அரசு மறுப்பதாக அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதுதான் ஆர்எஸ்எஸ் கொள்கை - கே.எஸ்.அழகிரி

சர்வாதிகாரர்களுக்கு ஜனநாயகம் மீது நம்பிக்கை இருக்காது எனவும், கிராமங்களை அழித்து பெரிய நகரங்களாக மாற்றுவதுதான் ஆர்எஸ்எஸ்சின் கொள்கை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

  • ஆர்பிட் நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்கள் விற்பனை!

சென்னை: பிரபல மின்னணு உபகரணங்கள் உற்பத்தி நிறுவனமான ஆர்பிட் நிறுவனத்தின் பெயரில் போலி பொருட்களை விற்பனை செய்த கடை நிர்வாகியை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • கரோனா பரவல்... பாதிக்கப்பட்ட படைபிடிப்பு... 18 ஆண்டுகளாக கடைப்பிடித்த கொள்கையை கைவிடும் அக்ஷய்குமார்!

டெல்லி: கோவிட்-19 காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதால், சுமார் 18 ஆண்டுகளாக கடைப்பிடித்த கொள்கையை கைவிட்டு தினசரி 18 மணி நேரம் படப்பிடிப்பில் பங்கேற்க அக்ஷய்குமார் சம்மதித்துள்ளார்.

  • மூடர் குறும்படத்திற்கு விருது!

வைரஸ் குறித்து கூறும் குறும்படமான மூடர் படத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது.

  • இத்தாலியன் ஓபன் 2020: இறுதிச்சுற்றில் ஜோகோவிச்!

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் உலகின் நம்பர் ஒன் வீரரான நோவாக் ஜோகோவிச் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

  • உலகளவில் 3 கோடியே 12 லட்சம் பேர் கரோனாவால் பாதிப்பு!

உலகளவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரத்து 103 ஆக அதிகரித்துள்ளது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.