ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3pm

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3pm
3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @3pm
author img

By

Published : Jun 8, 2020, 3:02 PM IST

1. டெல்லி அரசின் உத்தரவு தீவினையானது - மாயாவதி

லக்னோ: டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் அனுமதி என்ற அரசின் உத்தரவு தீவினையானது என உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி அதிருப்தி தெரிவித்துள்ளார்.

2. மருத்துவமனையில் டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே அனுமதி!

டெல்லி: உரிய ஆவணங்களையுடைய டெல்லி வாழ் மக்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என டெல்லி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

3. ஊரடங்கு மீறல்: ரூ.11 கோடியை நெருங்கும் அபராதம்!

சென்னை : ஊரடங்கை மீறியதற்காக கடந்த 76 நாள்களில் தமிழ்நாடு முழுவதும் 10 கோடியே 90 லட்சத்து 26 ஆயிரத்து 534 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

4. மருத்துவமனைக்கு அழைத்து வந்து என்ன செய்வது? - எச்சரிக்கும் வரதராஜன்

கரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்திவரும் வேளையில், தமிழ்நாட்டில் மருத்துவ வசதிகள் எப்படி இருக்கிறது என்பது குறித்து நடிகர் வரதராஜன் ஒரு காணொலியை பகிர்ந்துள்ளார்.

5. 'நிற்க அதற்கு தக' - குறளாய் எதிரொலிக்கும் நேத்ராவின் குரல்

"என்னுடைய பள்ளியும் ஆசிரியர்களுமே என்னை செதுக்கினார்கள். அவர்கள் கற்றுத்தந்த விஷயங்களே எனக்குள் நல்ல மாற்றங்களை உருவாக்கின" என்று பேசும் நேத்ராவின் குரலில் "கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக" என்ற குறளின் வரிகள் ஆழ பதிந்திருந்தது.

6. பத்திரிகை தகவல் மையத்தின் தலைவருக்கு கரோனா

டெல்லி: பத்திரிகை தகவல் மையத்தின் முதன்மை இயக்குநர் கே. எஸ். தத்வாலியாவுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

7. லண்டனில் தொடரும் போராட்டம்: காவலர்கள்-போராட்டக்காரர்களிடையே மோதல்!

மத்திய லண்டனில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்டதற்கும் இன வெறிக்கும் எதிர்ப்புத் தெரிவித்துப் போராடிய ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது.

8. அமெரிக்க காவல் துறையினரை சட்டத்தின் முன்னிறுத்தும் புதிய சட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணத்துக்கு எதிராக போராட்டம் வலுத்துவரும் நிலையில், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் காவலர்களை பொறுப்பாக்கும் புதிய சட்டம் ஒன்றை ஜனநாயகக் கட்சியினர் முன்மொழிந்துள்ளனர்.

9. ரிசார்ட் அரசியல் : மாநிலங்களவை தேர்தலையொட்டி குஜராத்தில் அரசியல் கூட்டு தொடங்கியதா?

டெல்லி: மாநிலங்களவை தேர்தலையொட்டி குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 19 காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜஸ்தானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

10. விளக்குக் கம்பங்கள் அமைக்காமலேயே திறந்துவைக்கப்பட்ட பாலம்!

மதுரை: ஓரிடத்தில்கூட விளக்குக் கம்பங்கள் அமைக்கப்படாமல் காளவாசல் மேம்பாலம் அவசர கோலத்தில் முதலமைச்சரால் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.