ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @3 PM - ஈடிவி செய்திகள்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ..

3 மணி செய்திச் சுருக்கம்
3 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 20, 2021, 3:05 PM IST

'கரோனா உயிரிழப்பு; வெள்ளை அறிக்கை வெளியிடுக' - சீமான்

கரோனா நோயாளிகளின் உயிரிழப்பு எண்ணிக்கையின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அரசு வெள்ளை அறிக்கை வெளியிட முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

11 மாவட்டங்களுக்கு தளர்வு இல்லை: எவை எவைக்கு அனுமதி

தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்களை மூன்றாகப் பிரித்து, தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வாள்வீச்சு வீராங்கனைக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிய முதலமைச்சர்

வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி தமிழ்நாடு அரசிடம் ஐந்து லட்ச ரூபாய் நிதியுதவி கோரியிருந்த நிலையில், அவரது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் 50 விழுக்காடு தள்ளுபடி!

மதுரையில் உள்ள அழகு நிலையம் ஒன்று, கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றிதழ்களுடன் வருபவர்களுக்கு 50 விழுக்காடு வரை தள்ளுபடி அளிப்பதாக அறிவித்துள்ளது.

ஆரணியில் கஞ்சா கடத்திய மூவர் கைது

ஆரணியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை மாதவரம் தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

'மெட்ரோ ரயிலில் ஊர் சுற்றிப்பார்த்த குரங்கு’ - வைரல் வீடியோ!

டெல்லி மெட்ரோ ரயிலில் குரங்கு ஒன்று பயணிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.ரயிலில் பயணிக்கும் குரங்கு, பயணியின் அருகில் அமர்ந்தவாறு, வேடிக்கை பார்த்துக்கொண்டே பயணம் செய்கிறது. வீடியோ பார்க்கும் பலரும் இந்தக் குரங்கு எங்கு செல்கிறது எனக் கேள்வி ஏழுப்புகின்றனர். மற்றொருபுறம் குரங்கு எப்படி மெட்ரோ ரயிலுக்குள் வந்தது என்பது குறித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நடக்க முடியாத ஆட்டுக்குட்டியை ’பிளாஸ்டிக் பைப்’ சக்கரக்கால்களுடன் ஓட வைத்த பேரன்பு!

இனி ஆட்டுக்குட்டி நடக்காது என்று தெரிந்தவுடன் அதை கசாப்புக் கடைக்கு விற்கச் சொல்லி உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால் அதை நான் பொருட்படுத்தவில்லை. தற்போது ஆட்டுக்குட்டி நடக்கிறது, ஓடுகிறது” என சைமன் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

சென்னை: தீவிர தூய்மைப் பணிகளை மாநகராட்சிக்கு உள்பட்ட 614 இடங்களில் ஜூன் 21ம் தேதி முதல் 26ம் தேதி வரை நீட்டிக்குமாறு ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்

பாடகி தபு மிஷ்ரா காலமானார்!

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த பாடகி தபு மிஷ்ரா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் திருப்பதி தேவஸ்தானம் கட்டும் கோயில்களின் கட்டுமானப் பணிகள் தீவிரம்

இந்தியா முழுவதும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கட்டப்பட்டு வரும் 500 கோயில்கள், ஒரு ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.