ETV Bharat / state

3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3pm - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 3 pm
Top 10 news @ 3 pm
author img

By

Published : Sep 26, 2020, 3:29 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கிடையே நடைபெறவுள்ள பிகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • 'எஸ்.பி.பி தன்மை மிகுந்த மாமனிதர்' - நடிகை ராதா இரங்கல்!

உடல் நலக்குறைப்பாட்டால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வைத்து உலகறிந்த பிரபல பின்னணிப் பாடகர் உயிர் பிரிந்தது. திரைத் துறையினர் தொடங்கி மூலை முடுக்கில் உள்ள சாமானியர் வரை, இவரின் பிரிவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னணி நடிகையான ராதா தனது இரங்கல் காணொலிப் பதிவை வெளியிட்டுள்ளார்.

  • ‘எதைச் சொல்லி உங்கள் இழப்பை ஈடுசெய்யப் போகிறேன்’ - நடிகர் மோகன் உருக்கம்

எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன் என நடிகர் மோகன் கூறியுள்ளார்.

  • 'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்பிபி நேற்று (செப். 25) சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இது தொடர்பாக தனது இரங்கலை சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • மோடி அரசிற்கு எதிராக குரல் எழுப்புங்கள் - ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாயிகளை எவ்வாறெல்லாம் சுரண்டுகிறது என்று மக்கள் குரல் எழுப்புமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் 'விவசாயிகளுக்காக பேசுங்கள்' என்ற பரப்புரையை தொடங்கி, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

  • மாற்று சமூக பெண்ணுடன் திருமணம் - மகனை கடத்தி தாக்கி மொட்டை அடித்த குடும்பத்தினர்

வாழப்பாடி அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கடத்திச் சென்று மொட்டை அடித்து தாக்கி கொடுமைப்படுத்திய பெற்றோர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கரோனாவை எதிர்க்க வலுவான சக்தி கொண்ட அமெரிக்காவின் நான்காவது தடுப்பூசி!

அமெரிக்காவில் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசியில் கரோனாவை எதிர்க்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • எஸ்.பி.பி.க்கு நடிகர் விஜய் அஞ்சலி!

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.

  • 'அவர் போன்று ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணருகிறது' - மன்மோகனுக்கு ராகுல் பிறந்தநாள் வாழ்த்து!

'மன்மோகன் சிங் போன்ற பிரதமர் இல்லாததை நாடு உணருகிறது' என்று அவரது பிறந்தநாளான இன்று (செப். 26) வாழ்த்து தெரிவிக்கையில் ராகுல் காந்தி ட்விட்டரில் பெருமிதத்துடன் பதிவிட்டுள்ளார்.

  • பிகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

கரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கிடையே நடைபெறவுள்ள பிகார் தேர்தலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

  • 'எஸ்.பி.பி தன்மை மிகுந்த மாமனிதர்' - நடிகை ராதா இரங்கல்!

உடல் நலக்குறைப்பாட்டால் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனையில் வைத்து உலகறிந்த பிரபல பின்னணிப் பாடகர் உயிர் பிரிந்தது. திரைத் துறையினர் தொடங்கி மூலை முடுக்கில் உள்ள சாமானியர் வரை, இவரின் பிரிவுக்கு கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னணி நடிகையான ராதா தனது இரங்கல் காணொலிப் பதிவை வெளியிட்டுள்ளார்.

  • ‘எதைச் சொல்லி உங்கள் இழப்பை ஈடுசெய்யப் போகிறேன்’ - நடிகர் மோகன் உருக்கம்

எஸ்.பி.பியின் இழப்பை எந்த வார்த்தைகளைப் போட்டு நிரப்புவது என்று தெரியாமல் அல்லாடுகிறேன் என நடிகர் மோகன் கூறியுள்ளார்.

  • 'என்னை தூக்கிவிட்டவர் அவர்' - எஸ்.பி.பி குறித்து சதுரங்க வீரர் விஸ்வநாதன் உருக்கம்!

உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பாடகர் எஸ்பிபி நேற்று (செப். 25) சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். இது தொடர்பாக தனது இரங்கலை சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  • மோடி அரசிற்கு எதிராக குரல் எழுப்புங்கள் - ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் விவசாயிகளை எவ்வாறெல்லாம் சுரண்டுகிறது என்று மக்கள் குரல் எழுப்புமாறு காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சமூக ஊடகங்களில் 'விவசாயிகளுக்காக பேசுங்கள்' என்ற பரப்புரையை தொடங்கி, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை

மியான்மர் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மீனவர்களை மீட்கக் கோரி வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

  • மாற்று சமூக பெண்ணுடன் திருமணம் - மகனை கடத்தி தாக்கி மொட்டை அடித்த குடும்பத்தினர்

வாழப்பாடி அருகே மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்துகொண்ட இளைஞரை கடத்திச் சென்று மொட்டை அடித்து தாக்கி கொடுமைப்படுத்திய பெற்றோர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • கரோனாவை எதிர்க்க வலுவான சக்தி கொண்ட அமெரிக்காவின் நான்காவது தடுப்பூசி!

அமெரிக்காவில் கண்டுபிடித்த நான்காவது தடுப்பூசியில் கரோனாவை எதிர்க்கும் வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.