ETV Bharat / state

மதியம் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1PM - பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்திச் சுருக்கம்...

Top 10 News @ 1 PM
Top 10 News @ 1 PM
author img

By

Published : Mar 27, 2021, 12:58 PM IST

பள்ளப்பட்டி சம்பவம்: அண்ணாமலைக்கு ஆதரவாகக் களமிறங்கிய அதிமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்!

கரூர்: அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு ஆதரவாகச் செயல்படுவதாக அதிமுக நிர்வாகிக்கு ஃபேஸ்புக்கில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேய் ஆட்சியை ஒழித்துவிட்டு பிசாசு கையில் ஆட்சியைக் கொடுத்துவிடாதீர்கள் - டிடிவி பேச்சு

எடப்பாடி பழனிசாமி கம்பெனியினர் ஏரி, குளங்களைத் தூர்வாரினார்களோ இல்லையோ, தமிழ்நாடு கஜானாவை தூர்வாரிவிட்டனர். தற்போது நடைபெற்றுவரும் பேய் ஆட்சியை ஒழித்துவிட்டு பிசாசு கையில் ஆட்சியைக் கொடுத்துவிடாதீர்கள் என்று பரமத்தியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேசினார்.

குளச்சலில் பாஜகவினருக்கும் நகராட்சி அலுவலர்களுக்கும் மோதல்

குளச்சலில் பாஜக நிர்வாகிகள் முகக்கவசம் அணியாததால் அபராதம் செலுத்துமாறு நகராட்சி அலுவலர்கள் வலியுறுத்தியதால் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

வங்க தேச காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு!

வங்கதேசத்தில் உள்ள நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள்கள் பயணமாக வங்கதேசம் சென்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி ஏற்ற உத்தரவு!

ஜம்மு காஷ்மீர் யூனியனில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் தேசியக் கொடியை ஏற்ற உத்தரவிட்டுள்ளது.

டெல்லி கலவரம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் இஸ்லாமிய அமைப்பு!

டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜாமியத் என்ற இஸ்லாமிய அமைப்பு வீடு கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது.

நோட்டாவுக்கு வாக்களிக்க விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம்!

கிருஷ்ணகிரி: மனித- விலங்கு மோதலுக்கு எந்த அரசியல் கட்சிகளும் முறையான நடவடிக்கை எடுக்காததால் இந்தத் தேர்தலில் நோட்டாவுக்கு வாக்களிக்க இருப்பதாகத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

நாராயணசாமியின் பாதுகாப்பு அலுவலர்கள் மாற்றம்

புதுச்சேரி: முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் பாதுகாப்பு அலுவலர்களைத் தலைமைத் தேர்தல் அலுவலர் மாற்றியமைத்து உத்தரவிட்டுள்ளார்.

'மீனவர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் திமுக நிறைவேற்றித்தரும்' - கீதாஜீவன்

தூத்துக்குடி: மீனவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித்தர திமுகவிற்கு வாக்களியுங்கள் என தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் கீதாஜீவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தூத்துக்குடியில் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் கைது: ரூ.5 லட்சம் நகைகள் மீட்பு

சென்னை, வேலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 47க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நபரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.