ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - Top 10 new

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

1 மணி செய்திச் சுருக்கம்
1 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Sep 3, 2020, 1:07 PM IST

தனித் தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களுக்கு அறிகுறிகள் இருப்பதை தெரிவிக்க முடியாது என்பதனால் மாற்றத்திற்கான இந்தியா என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்!

சென்னை: நடப்பு செமஸ்டருக்கான கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

துரோகம் இழைத்த நண்பர்கள் - மன உளைச்சலால் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட வழக்குரைஞர்

சென்னை : தனது பெயரை உபயோகித்து பிறரிடம் பணம் வசூலித்தும், அதுகுறித்து விசாரித்தபோது தன்னை மிரட்டவும் செய்த நண்பர்களின் செய்கையால், ராஜேஷ்குமார் என்னும் வழக்குரைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தாறுமாறாக ஓடிய அரசுப் பேருந்து: நால்வர் உயிரிழப்பு!

சிவகிரியிலிருந்து ஈரோடு சென்ற அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறிய இளைஞர்? - காவல் துறை சந்தேகம்

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே காணாமல்போன இளைஞர் ஒருதலைக் காதலால் உடன்கட்டை ஏறி இருக்கலாமென காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.

‘சொந்த காசில் சூனியம் வைக்கும் தேமுதிக’ - சுதீஸ் பதிவுக்கு செந்தில் குமார் எம்பி காட்டம்!

அடுத்தாண்டு(2021) நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகான புகைச்சல் தற்போதே தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக என இருபெரும் கட்சிகளின் தொண்டர்களிடத்தில் கூட்டணி குறித்து இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இச்சூழலில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே. சுதீஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட கேலிச் சித்திரம், பிற கட்சி தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய - சீன பதற்றம்: லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி

டெல்லி: இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், எல்லை பகுதியான லடாக்கிற்கு செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி முகுந்த் நரவணே ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற நிலைக்குழு முன் பேஸ்புக் நிர்வாகிகள் ஆஜர்!

டெல்லி: வெறுப்புவாத பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக பேஸ்புக் நிறுவனம் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாகிகள் நேற்று(செப்.2) நாடாளுமன்ற நிலைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

கரோனா சவால்களை எதிர்கொள்ள கைக்கோக்கும் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள்

டெல்லி: கரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ள புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான யோசனைகளை உருவாக்கும் நோக்கில் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து செயல்படவுள்ளனர்.

ஊடகங்கள் ரியாவை தவறாக சித்தரிக்கின்றன - ஷிபானி தண்டேகர்

சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் சந்தேகிக்கப்படும் ரியாவுக்கு ஆதரவாக நடிகை ஷிபானி தண்டேகர் எழுதிய பதிவு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.