ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

top-10-news-at-11am
top-10-news-at-11am
author img

By

Published : Jun 15, 2020, 11:11 AM IST

ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை - காங்கிரஸ் வலியுறுத்தல்

டெல்லி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை நிர்ணயத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

மணல் ஓவியம் மூலம் சுஷாந்த் சிங்கிற்கு மரியாதை!

மும்பை: மணல் ஓவியக் கலைஞர் ஒருவர், ஓவியம் மூலம் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவிட்-19 நெருக்கடி: ஆந்திரா கோயில்களில் சிறப்பு யாகம்!

அமராவதி: ஆந்திராவில் பண்டைய கால கோயில்களில் உபநிடதங்கள் மற்றும் ஆகமங்களின்படி யாகம் நடத்துவதற்கான வழிமுறைகளை மாநில அறநிலையத் துறை வெளியிட்டுள்ளது.

நர்சிங் ஹோம்களை கோவிட்-19 மையங்களாக்கும் திட்டத்தைக் கைவிட்டது டெல்லி அரசு!

டெல்லி: 10 - 49 படுக்கைகள் கொண்ட நர்சிங் ஹோம்களை கோவிட்-19 மையங்களாக மாற்றுமாறு டெல்லி அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அதனைத் தற்போது திரும்பப் பெற்றுக்கொண்டது.

நவம்பர் மாதத்தில் கரோனா உச்சமடையும் - ஐ.சி.எம்.ஆர். தகவல்

டெல்லி: நவம்பர் மாதத்தில் இந்தியாவில் கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தகவல் வெளியிட்டுள்ளது.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 963 பேர் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு!

விருதுநகர்: ஒடிசாவைச் சேர்ந்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் 963 பேர் விருதுநகர் ரயில் நிலையத்திலிருந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

நிதி நெருக்கடியால் நடிகர் சுஷாந்த் தற்கொலை?

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், நிதி நெருக்கடி காரணமாக தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என அவரது வீட்டு வாடகை ஒப்பந்தம் மூலம் தெரியவந்துள்ளது.

'வெளிநாட்டு லீக் தொடர்களுக்கு இந்திய வீரர்களை அனுமதிக்க வேண்டும்' - ஹர்பஜன் சிங்

இந்திய வீரர்களை வெளிநாட்டு லீக் போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ அனுமதிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

75ஆவது போர் வெற்றி நாள்: பிரமாண்ட ராணுவ அணிவகுப்புக்குத் தயாராகும் ரஷ்யா!

மாஸ்கோ: இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி சரணடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடத்த ரஷ்யா தயாராகிவருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.