ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jul 21, 2021, 11:16 AM IST

1 பக்ரீத் பண்டிகை - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

இஸ்லாமிய மக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

2 அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் - முதலமைச்சர் பக்ரீத் வாழ்த்து

ஈகை திருநாள் பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

3 கரோனா நிவாரண நிதி கொடுக்க சென்ற பெண் - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சியர்

விருதுநகரில் கரோனா நிவாரண நிதிக்காக தனது மூன்றரை சவரன் தங்க நகையை வழங்க சென்ற பெண்ணுக்கு அரசு வேலைக்கு பரிந்துரை செய்வதாக மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி உறுதியளித்தார்.

4 நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது.

5 கிராவல் மணல் கடத்திய 6 பேர் கைது

சாத்தூர் அருகே ஐந்து டிராக்டர்களில் கிராவல் மணல் கடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6 குலுங்கிய வடஇந்தியா- மக்கள் அதிர்ச்சி!

ராஜஸ்தான், மேகாலயா உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர்.

7 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் உயிரிழப்பு- 42 ஆயிரம் பாதிப்பு!

நாட்டில் புதிதாக 42 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரம் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

8 ஐந்தே நாளில் எடியூரப்பா ராஜினாமா?

கர்நாடக முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பா ஜூலை 26ஆம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என்று யூகங்கள் வெளியாகிவருகின்றன.

9 உள்ளாட்சி தேர்தல்- காங்கிரஸ் தனித்து போட்டி!

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் கூறினார்.

10 குமாரசாமியின் ஆட்சியை கவிழ்க்க பெகாசஸ் செயலி மூலம் ஒட்டுக்கேட்பு?

2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஜேடிஎஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பெகாசஸ் செயலி மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.