ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் - Top 10 news @ 1PM - etvbharat tamil news

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்..

1PM
1PM
author img

By

Published : Jun 25, 2021, 1:35 PM IST

1.பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி மீது குண்டாஸ்

கிஷோர் கே சாமி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. இவர் மீது ஏற்கனவே தலைவர்கள், பெண் தலைவர்கள் குறித்து அவதூறாக பரப்பியதாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2.இன்றே கடைசி நாள் - 'நீங்க வாங்கியாச்சா'

ரேஷன் கடைகளில் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை, 14 மளிகைப் பொருள்கள் பெறுவதற்கு இன்றே கடைசி நாள் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

3.மீண்டும் கோயில்கள் திறப்பா? - கூடுதல் தளர்வுகள் என்னென்ன? - முதலமைச்சர் ஆலோசனை

தமிழ்நாட்டில் அமலில் உள்ள ஊரடங்கு 28ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது, கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

4. மருத்துவமனை ஊழியர்கள் மீது தாக்குதல்: 7 பேர் மீது வழக்குப்பதிவு!

கோயம்புத்தூரில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களை தாக்கியதாக 7 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

5.’டெல்டா பிளஸ் வைரஸைத் தடுக்க ஏன் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ளவில்லை...’ - ராகுல் கேள்வி

உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா வைரஸில் பாதிப்புகள் குறித்து கண்டறியும் வகையில் ஏன் இன்னும் பெரிய அளவிலான கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

6. '50 நாள்களில் முதலமைச்சரின் 50 சிறப்புத் திட்டங்கள்'

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 50 நாள்கள் நிறைவடைகிறது. கடந்த 50 நாள்களில் முதலமைச்சர் செயல்படுத்திய திட்டங்கள் குறித்துப் பார்க்கலாம்.

7. உடல்நலம் தேறி வரும் சிவசங்கர் பாபா

சிவசங்கர் பாபாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதால், இன்று(ஜூன்.25) அல்லது நாளை மீண்டும் சிறையில் அடைக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

8.இந்தியாவில் 51 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு

இந்தியாவில் நேற்று (ஜூன்.24) ஒரேநாளில் 65 ஆயிரத்து 527 பேர் குணமடைந்ததாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

9. விரைவில் பிரமாண்டமாக வெளியாகும் வலிமை ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: நடிகர் அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் மிக பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

10.’ஹிட் கொடுக்கலனா என்ன இப்போ? கதை ஓகே’ - காஜல் அகர்வால் பளீச்

டீ.கே. இயக்கத்தில் கதாநாயகியாக நடித்து வெளியான ’கவலை வேண்டாம்’ திரைப்படம் ஹிட் கொடுக்காதபோதும், ஹாரர் வகை திரைப்படத்தின் திரைக்கதை பிடித்ததன் காரணமாக மீண்டும் அவரது இயக்கத்தில் நடிக்க நடிகை காஜல் அகர்வால் ஒப்புக் கொண்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.