ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் - TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் முற்பகல் 11 மணி செய்திச் சுருக்கம் இதோ...

11 மணி செய்திச் சுருக்கம்
11 மணி செய்திச் சுருக்கம்
author img

By

Published : Jun 15, 2021, 11:10 AM IST

1. ஆளுங்கட்சித் தொடர்புடைய பத்திரிகைகள் வாங்க அழுத்தம் ஏன்?

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட நூலகங்களில் ஆளுங்கட்சித் தொடர்புடைய பத்திரிகைகள் வாங்க வேண்டும் என ஊராட்சிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஏன் என்று தன்னாட்சி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

2. பயங்கரவாதிகள் பற்றிய தகவலுக்கு தலா ரூ.10 லட்சம்: சுவரொட்டி ஒட்டிய ஜம்மு காவல் துறை

காஷ்மீரின் சோபோர் நகரின் முக்கிய வீதிகளில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மூன்று பேரின் புகைப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அவர்கள் குறித்து தகவல் கொடுத்து, கைது செய்ய உதவினால் தலா ரூ.10 லட்சம் தருவதாக அம்மாநில காவல் துறை அறிவித்துள்ளது.

3. என்னது மறுபடியும் ஊசி போடணுமா? வரவிருக்கும் 'பூஸ்டர் டோஸ்'

கோவிட் -19 தடுப்பூசிகளின் நீண்ட செயல்திறனைப் பராமரிக்க பூஸ்டர் டோஸ் தேவையா, இல்லையா என்ற ஆராய்ச்சி நடைபெற்றுவருவதாக எய்ம்ஸ் மருத்துவர் தகவல் தெரிவித்துள்ளார்.

4. சிவசங்கர் பாபாவுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்? டேராடூன் விரைந்த சிபிசிஐடி

சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க சிபிசிஐடி காவல் துறையினர், அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

5. ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம்: அமைச்சகங்களை மதிப்பாய்வு செய்யும் மோடி!

உள் துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா ஆகியோருடன் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து அமைச்சகங்களையும் தனிப்பட்ட முறையில் மதிப்பாய்வு செய்துவருகிறார்.

6. திரைகடல் ஓடி திரவியம் தேடப் புறப்பட்டனர் கடலோடிகள்

கரோனா நெறிமுறைகளை பின்பற்றி 71 நாள்களுக்கு பிறகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

7. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும் - அமைச்சர் கே.என். நேரு

ராமநாதபுரம்: குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

8. 75 நாள்களுக்கு பிறகு 60 ஆயிரமாக குறைந்த கரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்து 726 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

9. பெண் காவலர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தொடர் மிரட்டல்!

பெண் காவலரை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து மிரட்டி வந்த நபர்கள் மீது, காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

10. காலாவதியாகும் பாஸ்போர்ட் - நீதிமன்றத்தை நாடிய கங்கனா

நடிகை கங்கனா தனது பாஸ்போர்ட்டை புதுப்பித்துத் தர அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.