ETV Bharat / state

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்.

top 10 news at 11 am
காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM
author img

By

Published : Apr 4, 2021, 10:28 AM IST

வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன?

வாக்குப்பதிவு அன்று அரசியல் கட்சிகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் என்னென்ன என்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிகாலை வரை செந்தில் பாலாஜி உள்ளிருப்புப் போராட்டம்

இறுதிநாள் பரப்புரை அனுமதியை வழங்கும் வரை அலுவலகத்தை விட்டு வெளியேற மாட்டேன் எனக் கூறி கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி கரூர் வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று அதிகாலை 2 மணி வரை உள்ளிருப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்.

'அண்ணா பல்கலை. புதிய துணைவேந்தர் தேர்வு தேர்தலுக்குப் பின்னர் நடைபெற வேண்டும்!'

அண்ணா பல்கலைக்கழகத்துக்கான புதிய துணைவேந்தர் தேர்வில் விதிமீறல் நடைபெற்றுள்ளதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

'காமராசருக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தவர் கருணாநிதி!'

காமராசர், ஜானகிக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தார் கருணாநிதி. அப்படி இருக்கும்போது அவருக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு ஒரு நியாயமா? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

'தேவையற்ற ரெய்டுகளைத் தவிர்க்க வேண்டும்' - அதிமுக கடிதம்

அரசியல் ரீதியாக அதிமுக அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது வருமானவரிச் சோதனைகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக வழக்கறிஞர் பிரிவு கடிதம் எழுதியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி நடிகரின் வீட்டிலிருந்து போதைப்பொருள்கள் பறிமுதல்!

தொலைக்காட்சி நடிகர் கெளரவ் தீக்சிட் (Gaurav Dixit) வீட்டில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) சோதனை மேற்கொண்டதில் போதைப்பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டன.

கட்டுப்பாட்டை இழந்து 5 முறைக்கு மேல் சுழன்ற கார் - காயமின்றி தப்பித்த ரேஸ் வீராங்கனை

எக்ஸ்ட்ரீம் ஈ கார் பந்தயத்தில் ஜெர்மன் ரேஸ் வீரங்கனையின் கார் கட்டுப்பாட்டை இழந்து ஐந்து முறைக்கு மேல் சுழன்று விபத்துக்குள்ளானது.

முரட்டு அடி சேவாக்கிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் - கேப்டன்சி குறித்து கங்குலி

வீரரின் மனநிலைக்கு ஏற்ப கேப்டன் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை சேவாக்கின் அதிரடி ஆட்டத்தை கட்டுப்படுத்த நினைத்தபோது உணர்ந்தேன் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலி யூடியூப் சேனலில் உரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தேசிய விருது வென்ற இமானை வாழ்த்திய விஸ்வாசம் படக்குழு!

சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருது வாங்கிய டி. இமானை 'விஸ்வாசம்' படக்குழுவினர் நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

முடிவுக்கு வரும் சிம்புவின் 'மாநாடு' - வெங்கட் பிரபுவின் லேட்டஸ்ட் ட்வீட்

சிம்பு நடிப்பில் உருவாகிவரும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.