ETV Bharat / state

ஈசிஆர் ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிக்கு நிலம் மாறுதல்; சென்னை மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் - CHENNAI MAYOR PRIYA

சென்னை மேயர் பிரியா தலைமையில் இன்று நடைப்பெற்ற மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ரிப்பன் மாளிகையில் நடந்த மாமன்ற கூட்டம்
ரிப்பன் மாளிகையில் நடந்த மாமன்ற கூட்டம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 1:26 PM IST

சென்னை: சென்னை மாதாந்திர மாமன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைப்பெற்றது. அதில், மாநகராட்சி பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிக்கு அனுமதி, கூட்டுறவு பதிவாளர் அலுவலகத்தை இணைக்கும் இரும்பு நடைபாதை மேம்பாலம் அமைக்க அனுமதி, புதிதாக மூன்று தெரு நாய் கருத்தடை மையம் அமைக்க அனுமதி, மாதவரம் பகுதிக்குட்பட்ட குமாரப்பா முதன்மை சாலைக்கு கலைஞர் கருணாநிதி சாலை என பெயர் மாற்றம் செய்ய அனுமதி, அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை டியூசிஎஸ் மூலம் கொள்முதல் செய்ய அனுமதி உள்ளிட்ட 51 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பல்லுயிர் பூங்கா

அதில், பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் பூங்கா அமைக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி திரும்பப் பெற்றுள்ளது.

தெரு நாய் கருத்தடை மையம்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் கருத்தடை சிகிச்சை செய்வது, வெறிநாய்க் கடி தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தற்போது பிரத்யேக இனக்கட்டுப்பாட்டு மையம் சென்னையில் 5 இடங்களில் உள்ள நிலையில், விலங்குகள் பராமரிப்பு திட்டத்தின் கீழ் லாயிட்ஸ் காலனி, கண்ணம்மா பேட்டை, புளியந்தோப்பு என 3 இடங்களில் கட்டப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் சிகிச்சைக்காக வரும் விலங்களுக்கான கூண்டுகள், நவீன அறுவை சிகிச்சை அரங்கு, தடுப்பூசி மையம், சமையற்கூடம், உயிரிழந்த விலங்குகளை எரியூட்டுவதற்கான கேஸ் மூலம் எரியும் தகன மேடை என நவீன முறையில் தயாராகி வரும் நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இந்நிலையில், கூடுதலாக மேலும் 3 மண்டலங்களில் இனக்கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் புதிய இனக்கட்டுப்பாட்டு மையங்களை சென்னை அமைக்க வுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டிற்கு வரவுள்ள 3 இனக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் ஆண்டிற்கு 27,000 நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள நிலையில், தற்போது புதிதாக அமைக்கப்படவுள்ள 3 இனக்கட்டுப்பாட்டு மையங்கள் மூலம் கூடுதலாக 20 ஆயிரம் கருத்தடை சிகிச்சை என மொத்தம் 47 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை அளிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இதையும் படிங்க: 'ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் செயல்'.. பத்திரிகையாளர் முகமது சுபைருக்கு கனிமொழி ஆதரவு குரல்!

கிழக்கு கடற்கரை ஆறு வழிச்சாலை விரிவாக்க பணி

கிழக்கு கடற்கரை ஆறு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்காக நெடுஞ்சாலை துறைக்கு நிலம் மாறுதல் செய்ய பரிந்துரை செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் மாறுதல் செய்வது குறித்து ஆட்சேபனை எதுவும் இல்லை எனவும், மற்றும் தடையின்மை சான்று வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, மற்றும் ஈஞ்சம்பாக்கம் கிராமங்களில் சுமார் ஐந்து ஏக்கர் நிலத்தை நெடுஞ்சாலை துறைக்கு நிறம் மாறுதல் செய்வது தொடர்பாக சென்னை மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு புறம்போக்கு, வாய்க்கால், குட்டை, கிராம நத்தம் வகைப்பாடு கொண்ட நிலத்தினை கிழக்கு கடற்கரை ஆறு வழி சாலை விரிவாக்கம் பணிக்காக நிலம் மாறுதல் செய்யப்படவுள்ளது.

இரும்பு நடை மேம்பாலம்

சென்னை, கீழ்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இந்த அலுவலக வளாகத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்து வெளியேற சில தினங்கள் ஆவதால், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அலுவலகத்திற்கு வர இயலாமல், அவசரகால பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இதைத் தவிர்க்க மழைக்காலங்களில் தொய்வின்றி அலுவலகத்திற்கு செல்ல, டாக்டர் குருசாமி பாலத்தில் இருந்து அலுவலக முதல் தளத்திற்கு அலுவலகப் பணியாளர்கள் நேரடியாக வரும் வகையில் இரும்பு நடை மேம்பாலம் கூட்டுறவு துறை மூலம் அமைத்துக் கொள்வதற்கும், பணிகளை உடனடியாக துவங்வும் மாநகராட்சி மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.