ETV Bharat / state

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை: நேரில் சென்று விசாரித்த முதலமைச்சர் ஸ்டாலின்! - M K STALIN VISITED EVKS ELANGOVAN

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று விசாரித்துள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
ஈவிகேஎஸ் இளங்கோவனை நேரில் சென்று நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2024, 2:00 PM IST

Updated : Nov 28, 2024, 2:30 PM IST

சென்னை: மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று வியாழக்கிழமை (நவ.28) அவரை நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 11 ஆம் தேதி கிண்டி மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இதற்கிடையில், நேற்று அவரது (நவ.27) உடல்நிலை சற்று பின்னடைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை ஈவிகேஎஸ் இளங்கோவனை மருத்துவமனையில் நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்தும், அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்துள்ளார். அத்துடன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: திரெளபதி முர்மு தமிழக பயணம்: உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது, “ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை நேற்று சற்று பின்னடைவு ஏற்பட்டது. இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரும், நானும் நேரில் சென்று பார்த்தோம். தீவிர சிகிச்சையில் என்னென்ன மருத்துவ உதவிகள் அளிக்கப்படுமோ அவை அனைத்தும் மியாட் மருத்துவமனை சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளங்கோவன் மீண்டும் குணமடைந்து வந்து, வருகின்ற 9 ஆம் தேதி சட்டமன்றத்தில் அவர் குரல் ஒலிக்கும். அவர் குரலை கேட்க தமிழக மக்கள் ஆவலோடு உள்ளார்கள். மீண்டும் மக்கள் பணிக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் திரும்புவார்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் மகன் திருமகன் ஈவெரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்எல்ஏ-ஆக உள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், இன்று மாலை அறிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

Last Updated : Nov 28, 2024, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.